தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். அஜித் ரெபரென்ஸ் வைத்து பல்வேறு படங்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘பில்லா பாண்டி’ படத்தில் கூட சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் அதர்வாவும் தீவிர அஜித் ரசிகராக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். 8 தோட்டாக்கள் என்ற வெற்றி படத்தை படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா ‘குருதி ஆட்டம்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
ராக் போர்ட் என்டெர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ பி கார்த்திகேயன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். மதுரை மாநகரின் பின்னணியில் கமர்சியல் மற்றும் திரில்லர் பாணியில் படம் உருவாகி வருவதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் அதர்வா ஒரு கபடி வீரராக நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியா பவாணி ஷங்கர் நடிக்கிறார்.
மேலும் , ராதாரவி, ராதிகா போன்றவர்கள் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படம் இன்னும் 6 மாதங்களில் வெளியாக இருக்கிறது.