எவன் எவனோ என்ன பத்தி கோவலமா பேசுறான், எனக்கு பவர் இருந்தா? ஆதங்கத்தில் யூடியூபர் இர்பான் சொன்னது

0
84
- Advertisement -

சமீப காலமாக இர்ஃபான் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சினிமா நடிகர்களை விட ட்ரெண்டிங்கில் உள்ளவர்கள் யூடியூபர்கள் தான். யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகர் இர்ஃபானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் பல்வேறு ஹோட்டல்களுக்குச் சென்று உணவுகளின் டேஸ்ட் குறித்தும், தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்.
இதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று கூட சொல்லலாம். மேலும், இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசிபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் பார்த்து முடிவு செய்த இந்த திருமணம் மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான யூடியூபர்கள், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தி இருந்தார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியில் இர்ஃபான் போட்டியாளராக கலந்துகொண்டு தன்னுடைய சமையல் திறமையை போட்டியாளராக இருந்தார். இதனிடையே இர்ஃபானின் மனைவி கர்ப்பமாக இருந்தார் என்று அறிவித்து இருந்தார். அதற்கு பின் சில மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் இர்ஃபான் துபாய் சென்று இருந்தார். அங்கு கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியின் கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் செய்து தெரிந்து கொண்டார். இதனை வைத்து செய்து ரிவில் வீடியோவை இர்ஃபான் வெளியிட்டு இருந்தார். இதற்கு இவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது.

- Advertisement -

சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான்:

பின்னர், அந்த சம்பவத்திற்கு இர்ஃபான் மன்னிப்பு கேட்டும் , அந்த வீடியோவையும் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி இருந்தார். இந்த சர்ச்சை ஓய்ந்து சில மாதங்களே ஆன நிலையில் அதே குழந்தை விவகாரத்தை வைத்து புதிய சர்ச்சை ஒன்றில் இர்ஃபான் சிக்கி இருந்தார். இர்ஃபான் தனது யூடியூப் சேனலில் தன் மனைவியின் பிரசவ நிகழ்வை வீடியோவாக பதிவு செய்ததை வெளியிட்டு இருந்தார். அதில் மனைவியின் பிரசவத்தில் குழந்தை தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் தான் வெட்டும் வீடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருந்தார்.

இர்பான் வீடியோ:

இந்த விவகாரத்தில் இர்ஃபான், மருத்துவர், மருத்துவமனை மீது நடவடிக்கை என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருந்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இர்பான் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம், அவருக்கு அரசியல் கட்சியில் இருந்து சிலர் சப்போர்ட்டாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது இர்பான் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டார். அதில், இத்தனை நாள் என் மீது நிறைய புகார்கள் சுமத்தினார்கள். அதை வெளியில் இருப்பவர்கள், என்னை பற்றி தெரியாதவர்கள் பேசியிருந்தால் கூட நான் கண்டு கொள்ளாமல் இருக்க முடியும்.

-விளம்பரம்-

சர்ச்சைகளுக்கு கொடுத்த விளக்கம்:

என்னுடன் இருந்து கொண்டே என்னை பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் வெளியில் வேறு மாதிரி பேசுவதை என்னால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. என் வீட்டில் இருப்பவர்கள் என்னை திட்டுவது பரவாயில்லை. என் மதத்தை வைத்து பல விஷயங்கள் பேசப்படுகிறது. ஒருவர் செய்யும் செயல்தான் அவர்களுக்குக்கான மரியாதை கொடுக்கும். இத்தனை நாள் நான் அமைதியாக இருந்ததற்கு காரணம், வழக்கறிஞர்கள் இதுபற்றி பொதுவெளியில் பேச வேண்டாம் என்று சொன்னார்கள். அதனால் தான் நான் அமைதியாக பொது வழியில் பேச வேண்டாம் என்று அமைதியாக இருந்தேன். இப்போது அவர்கள் பேச்சையும் மீறி நான் இங்கு என் மனதில் இருக்கும் ஆதங்கத்தை சொல்கிறேன்.

ஆதங்கத்தில் இர்பான் சொன்னது:

என்னால் இதற்கு மேல் தாங்க முடியாது. எனக்கு அரசியல் கட்சியின் ஆதரவு இருப்பதாக எவன் எவனோ பேசுறான். என்னைப் பற்றி கேவலமாக எத்தனையோ வீடியோ இருக்கிறது. அது எல்லாம் தடுத்தாலுமே என்னைப் பற்றிய பேச்சுகள் குறையவே இல்லை. 2024 ஆம் ஆண்டில் நான் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறேன். எனக்கு அரசியல் பின்புலம் இருப்பதாக சொல்கிறார்கள். அரசியல் பின்புலம் இருந்தால் என்னைப் பற்றிய பேச்சுகள் வராமலே நான் தடுத்திருக்க முடியும். என்னைப் பற்றிய சர்ச்சை வீடியோக்களை முற்றிலும் தடை செய்தீர்களா? எனக்கு உதவுவதால் அவர்களுக்கு எல்லாம் என்ன பயன்? நான் ஏன் இப்படி கஷ்டப்படுகிறேன், விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறேன்? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டிருக்கிறார்.

Advertisement