நாங்க ரெண்டு பேரும் வேற வேற சாதி, இருந்தும் திருமணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க – மதன் கௌரியின் காதல் கதை

0
1646
madann
- Advertisement -

பொதுவாகவே யூடியூப் பலருக்கு பொழுது போக்கு தளமாக இருந்தாலும் சில பேருக்கு வருமானம் ஈட்டும் தளமாக அமைந்து வருகிறது. யூட்யூப் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பல பேர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் யூடியூப் மூலம் பிரபலமானவர் தான் மதன் கௌரி. இவர் யாரும் அறியாத பல சுவாரசியமான தகவலை வீடியோவாக வெளியிட்டு வருவதன் மூலமாகவே மக்கள் மத்தியில் சீக்கிரமாகவே பிரபலமாகிவிட்டார் என்று சொல்லலாம். அதிலும் வெளிநாடுகளில் நடக்கும் சில நிகழ்வுகளை நமக்கு புரியும் வகையில் எளிதாக தமிழில் இவர் சொல்கிறார். அது மட்டுமில்லாமல் இந்தியாவில் நிலவும் பல சமூகப் பிரச்சினைகளையும் இவர் முன் வைக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை புரிந்து கொண்டு அதன்படி வீடியோக்கள் வெளியிடுவதன் மூலம் தான் இவர் அசால்டாக பிரபலமானார் என்றுகூடச் சொல்லலாம். தற்போது இவர் ஒரு மாதத்திற்கு இலட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மதன் கவரி தன் டுவிட்டரில் பிரபல கார் கம்பெனி அதிபர் எலான் மஸ்க் அவர்களை டேக் செய்து இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

- Advertisement -

யூடியூப் பிரபலம் மதன்:

அந்த ட்வீட்டுக்கு சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் எலான் மஸ்க் பதில் அளித்திருந்தார். அதில் அவர், இந்தியாவில் அதிக இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. அதனால் மின்சார வாகனம் இறக்குமதி சற்று தாமதம் ஆகிறது என்று பதில் அளித்து இருந்தார். இப்படி தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு உலகமே வியந்து பார்க்கும் ஒரு சிஇஓ ட்விட்டரில் பதிலளித்தது வியப்பை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மதன் சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருக்கிறார். இதனால் மதனுக்கு சோசியல் மீடியாவில் பாலோஸ் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இன்று மதன் கௌரிக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது.

மதன் பதிவிட்ட திருமண பதிவு:

இது குறித்து அவர் ஏற்கனவே இன்ஸ்டாவில் வீடியோ பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, நான் என்னுடைய பள்ளித்தோழி நித்யாவை மணக்க உள்ளேன். மதுரையில் பன்னிரண்டாம் வகுப்பு நானும் நித்யாவும் ஒரே பள்ளியில் படித்தோம். ஆனால், நாங்கள் நேரில் பேசியதில்லை. முதன்முதலாக பேஸ்புக்கில் தான் நாங்கள் பேசினோம். பின் நண்பர்கள் ஆனோம். ரெண்டு பேருக்குமே பிடித்துப்போனது. பிறகு பள்ளி முடிந்தும் எங்கள் நட்பு தொடர்ந்தது. வேறு வேறு கல்லூரியில் நாங்கள் சேர்ந்தோம். இருவரின் நட்பு காதலானது. ஒரு கட்டத்தில் ஒரு பெரிய சண்டை ஏற்பட்டு இரண்டு பேரும் பிரேக் அப் பண்ணிட்டோம்.

-விளம்பரம்-

திருமணம் குறித்து மதன் கூறியது:

அந்த சண்டைக்கு காரணம் நான் தான். அந்த பிரேக்கப் கொடுத்த மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க தான் நான் யூடியூப் சேனல் ஆரம்பித்தேன். நான் போட்ட வீடியோஸ் கொஞ்சம் கொஞ்சமாக ரீச் ஆனது. நிறைய பேர் பார்க்க வந்தார்கள். அப்புறம் அதையே முழுநேரமாக பண்ணினேன். அதன் பிறகு திரும்பவும் நித்யா கிட்ட பேசும் வாய்ப்பு கிடைத்தது. பின் நான் மன்னிப்பு கேட்டு என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதமா என்று கேட்டேன். அவளும் ஓகே என்று சொல்லிட்டாள். நாங்க ரெண்டு பேரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்.

மதன் கௌரி – நித்யாவின் திருமணம்:

ஆனாலும், எங்கள் வீட்டில் எந்த ஒரு எதிர்ப்பும் சொல்லாமல் எங்கள் காதலை ஏற்றுக் கொண்டார்கள். எங்க பெற்றோர்கள் மாதிரியே எல்லோரும் ஜாதி மதம் பார்க்காமல் காதலர்களை ஏற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும், இன்று மதன் கௌரி – நித்யாவின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இவர்களுடைய திருமண புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement