குழந்தைகளுக்கு கண்டிப்பாக இதை சொல்லிதர வேண்டும் – புதுச்சேரி சம்பவம் குறித்து யுவன்

0
224
- Advertisement -

கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் புதுச்சேரியில் மட்டும் இல்லாமல் தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. புதுச்சேரி முத்தியால் பேட்டையில் உள்ள சோலை நகர் பகுதியை சேர்ந்தவர்கள் நாராயணன்- மைதிலி தம்பதியினர். இவர்களுக்கு 9 வயதில் ஆர்த்தி என்ற மகள் இருக்கிறார். இவர் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

-விளம்பரம்-

இவர் கடந்த 2ம் தேதி தன்னுடைய வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் போது மாயமாகி இருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் தன் மகளை காணவில்லை என்று பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்திருந்தார்கள். நான்கு நாட்கள் ஆகியும் ஆர்த்தி கிடைக்கவில்லை. பின் ஒரு கால்வாயில் சாக்கு மூட்டையில் சடலமாக ஆர்த்தி கிடைத்து இருக்கிறார். இதனை அடுத்து போலீசார் உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அப்போது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்டு தெள்ளத்தெளிவாக தெரிந்திருக்கிறது.

- Advertisement -

புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம்:

பின் போலீஸ் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இது சம்பந்தமாக போலீஸ் குற்றவாளிகளை கைது செய்து இருக்கிறார்கள். அந்த ஏரியாவில் கஞ்சா குடிக்கும் 19 வயது இளைஞனும், 58 வயது கொண்ட முதியவரும் சேர்ந்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். பின் விசாரணையில், அந்த இளைஞர் சிறுமிக்கு மொட்டை மாடியில் பாலியல் தொல்லை கொடுத்த போது அதை பார்த்த முதியவரும் தன்னுடன் சேர்ந்து கொண்டதாகவும் சிறுமி ரொம்ப கத்தி ஆர்ப்பாட்டம் செய்ததால் அடித்த அடியில் அவர் இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்.

போலீஸ் விசாரணை:

இதை அறிந்த ஊர் மக்கள் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்க சொல்லி ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் நெஞ்சை பதற வைத்து இருக்கிறது. இது குறித்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய், கமல்ஹாசன் உட்பட பலர் கண்டித்து பதிவு போட்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது தொடர்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை என்பது அதிகமாக நடைபெறுகிறது.

-விளம்பரம்-

யுவன் சங்கர் ராஜா பதிவு:

இது பேரழிவு தரும் பிரச்சனை. ஏதோ ஒரு வகையில் 28.9% குழந்தைகள் பாலியல் தொல்லைகளை அனுபவிக்கிறார்கள். குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் சொல்லித் தருவது ரொம்ப முக்கியம். நம்மை சுற்றியுள்ளவர்களை பாதுகாக்க குழந்தைகள் வளரும் போதே அவர்களுக்கு நல்ல குணங்களை சொல்லி வளர்ப்பது அவசியம். புதுச்சேரியில் நடந்த இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. இதன் மூலம் பல தீமைகளை நாம் எதிர் கொள்கிறோம். பாதுகாக்கப்பட்ட சமுதாயம் ஆகவும் ஒன்றுபட்ட நாடாகவும் வளருவோம் என்று கூறியிருக்கிறார்.

யுவன் குறித்த தகவல்:

தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக யுவன் ஷங்கர் ராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பாவானான இளையராஜாவின் மகன் என்பது இசை ஒன்று. இளையராஜாவிற்கு பிறகு சினிமா உலகில் நிலையான இடத்தைப் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா தான். இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இவர் இதுவரை 130 படங்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார்.

Advertisement