விசில் போடு பாடலுக்கு வந்த விமர்சங்களால் தான் இன்ஸ்டா பக்கத்தை முடக்கினாரா யுவன்? – அவரே வெளியிட்ட காரணம் இதோ.

0
197
- Advertisement -

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தின் விசில் போடு பாடல் சமூக வலைத்தளத்தில் விமர்சனங்களை குவித்த நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தை முடக்கியதாக சர்ச்சை எழுந்தது. தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் யுவன். லியோ படத்தை தொடர்ந்து தற்போது விஜய் GOAT படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ பாடம் வெளியாகி இருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடலுக்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். மேலும், ராஜு சுந்தரம் இந்த பாடலுக்கு நடனமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய் பாடியுள்ள இப்பாடல் யூட்யூபில் தற்போது வரை 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நமபர் 1 இடத்தில் இருக்கிறது. ஆனாலும், இந்த பாடல் ஒரு தரப்பு ரசிகர்ளை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த பாடலுக்கு யுவனுக்கு பதிலாக அனிருத் இசையமைத்து இருக்கலாம் என்று ஒரு தரப்பு கூறி வரும் நிலையில் இன்னொரு புறம் இந்த பாடலின் வரிகள் நன்றாக இல்லை என்றும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென முடங்கியது. விசில் போடு பாடலுக்கு குவிந்த எதிர்மறை விமர்சனங்களால் தான் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தை முடக்கியதாக சர்ச்சை எழுந்தது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள யுவன் ‘சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் தனது இன்ஸ்டா பக்கம் முடங்கியதாகவும் விரைவில் திரும்ப வருவேன்’ என்றும் கூறியுள்ளார்.

யுவனின் இசை யைப் போல இந்த பாடலின் வரிகளும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதுகுறித்து பேசிய இந்த பாடலின் வரிகளை எழுதிய மதன் கார்க்கி ‘விசில் பாடலை எழுதும் போது விஜய்யின் அரசியல் வருகை குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால், படத்திற்கு பிறகு விஜய்யின் அரசியல் வருகை குறித்து அறிவிப்பு வரலாம் என்று வெங்கட் பிரபு சொல்லியிருந்தார். பார்ட்டி என்பது கொண்டாட்டமான பார்ட்டி போன்ற அர்த்தங்களையும் கொண்டிருக்கலாம்.

-விளம்பரம்-

மைக்க கையில் எடுக்கட்டுமா என்பது அரசியலை குறிப்பதாக மட்டும் இருக்காது. எல்லாவற்றுக்கும் மைக் தேவைப்படும். தமிழில் அதிகம் எழுதுவதுதான் எனக்கு பிடிக்கும். ஆனால், இந்த பாடல் இளைஞர்களுக்கு சென்று சேற வேண்டும் என்பதால் பல வார்த்தைகள் ஆங்கிலத்தில் எழுத வேண்டி இருந்தது. அதே போல முதலில் விசில் போடுக்கு பதிலாக சல்யூட் வார்த்தையை பல மொழிகளில் பயன்படுத்த திட்டமிட்டேன்.

பாடலுக்கு எதிராக புகார் :

கடைசியில் அதை மட்டும் விசில் போடு என மாற்றி கொண்டாட்ட பாடலாக இதை உருவாக்கினோம் இந்த பாடல் வரிகளை வெறும் 4 மணி நேரத்தில் எழுதியதாகவும் கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க இப்பாடலின் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்று அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாடலில் வன்முறை அடங்கிய வரிகள் இருப்பதாகவும், போதை பொருளை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement