‘இந்த போட்டோவ யுவன்கு அனுப்புங்க’ – தன் வெறித்தனமான ரசிகராக இருந்துள்ள மகன். யுவன் சொன்ன சுவாரசிய தகவல். வீடியோ இதோ.

0
247
- Advertisement -

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய யுவன் தனது திரையுலக பயணம் பற்றியும், விஜய் மகன் குறித்தும் சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பாவானான இளையராஜாவின் மகன் என்பது பலரும் அறிந்த ஒன்று தான். இளையராஜாவுக்கு கார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். இவர்கள் மூவருமே தன் தந்தையைப் போல இசையில் புலமை பெற்று வருகிறார்கள். இளையராஜாவின் குடும்பமே இசை குடும்பம் தான். ஆனால், இளையராஜாவிற்கு பிறகு சினிமா உலகில் இசையில் நிலையான இடத்தைப் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா தான்.

-விளம்பரம்-

நடிகர் சரத்குமார் நடிப்பில் கடந்த 1977ஆம் ஆண்டு வெளியான அரவிந்தன் என்ற படத்தின் மூலம் தான் யுவன்ஷங்கர் ராஜா திரையுலகிற்கு அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து உள்ளார். அதோடு இதுவரை இவர் 125 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். அதே போல தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் என பல நடிகர்களின் படத்திலும் பணியாற்றியுள்ளார் யுவன். மேலும், இன்று இவருடைய இசையை ரசிக்காத இளைஞர்களே இல்லை என்று சொல்லலாம்.

- Advertisement -

வலிமை படத்தில் யுவன்:

அந்தளவிற்கு தன்னுடைய இசையின் மூலம் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. அதுமட்டும் இல்லாமல் இவருடைய இசைக்காகவே பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்து உள்ளது. கடந்த வாரம் வெளியான அஜித்தின் வலிமை படத்திலும் யுவன்ஷங்கர் ராஜா சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து நேர்கொண்ட வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார்.

யுவனுக்கு நடந்த நிகழ்ச்சி:

இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.
படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். இப்படி இளசுகளின் இசை அரசனாக யுவன் ஷங்கர் ராஜா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி 25 ஆண்டுகள் முடிவடைந்திருக்கிறது. இதையொட்டி சென்னையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. இதில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா தனது திரையுலக பயணம் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து உள்ளார்.

-விளம்பரம்-

விஜய் மகன் குறித்து யுவன் சொன்னது:

அப்போது நடிகர் விஜயுடன் சமீபத்திய சந்திப்பு குறித்து ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு இவன் கூறியிருப்பது, தளபதி விஜய்யின் மகன் என்னுடைய தீவிரமான ரசிகன். அவர் Yuvanism என எழுதப்பட்ட டீ-சர்ட் அணிந்து திருப்படி இருக்கும் புகைப்படத்தை விஜயின் உதவியாளர் எனக்கு அனுப்பி இருக்கிறார். இதை பார்த்த எனக்கு பயங்கர சந்தோஷம். சமீபத்தில் விஜய்யை சந்தித்த போது கூட விஜய் இது குறித்து என்னிடம் பேசினார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஜேசன் சஞ்சய் Yuvanism என எழுதப்பட்ட டீ-சர்ட் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை எனக்கு விஜய் தான் அனுப்ப சொல்லி இருந்தார் என்று கூறியிருக்கிறார்.

யுவன்- சஞ்சீவ் ஜோசப் படம்:

இப்படி விஜய் மகன் குறித்து யுவன் கூறியிருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், தளபதி விஜய்யின் மகன் லண்டனில் சினிமாவில் இயக்குனராகவதற்கான படிப்பை படித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அவர் கூடிய விரைவில் சினிமாவில் படம் இயக்குவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் விஜயின் மகன் யுவனின் மிகப்பெரிய ரசிகன் என்பதன் மூலம் இருவரும் இணைந்து படத்தில் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement