தளபதி விஜய் நடித்து மெகா ஹிட் ஆகி இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிரது மெர்சல். தற்போது தனது அடுத்த படத்திற்க்காக தந்து ஆஸ்தான இயக்குனர் முருகதாசுடன் கை கோர்த்துள்ளார் விஜய்.
இந்த படத்திற்க்கான ஷூட்டிங் ஜனவரியில் துவங்கவுள்ள நிலையில் அதற்க்குள் படத்திற்கான ஹீரோயின் மற்றும் படக்குழு ஆகியவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியை மும்மூரமாக செய்து வருகிறார் முருகதாஸ்.
இதையும் படிங்க: தலனா ரொம்ப பிடிக்கும், ஆனா நான் தளபதி ரசிகன்! மெர்சல் பாடலை பாடி அசத்திய நடிகர் ?
ஏற்கனவே ஒளிப்பதிவாளரை தேர்வு செய்துவிட்ட நிலையில், ஹீரோயின் லிஸ்ட்டிலும் கிட்டத்தட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் உள்ளனர். தற்போது படத்திற்கான இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவிடம் பேசி வருவதாகத் தெரிகிரது.
இதற்கு முன்னர் ஒரு 2003ல் வெளிவந்த விஜயின் புதிய கீதை படத்திற்கு இசைமைத்துள்ளார். தற்போது விஜய்-62 படத்திற்கு யுவன் என்றால் இது இரண்டாவது முறையாகும். இந்த கூட்டணி அமைந்தால் பின்னனி இசை தெறிக்கவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.