தொலைக்காட்சித் தொடரில் நடித்த பல்வேறு நடிகர் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் பிரபலநடிகரும், தொகுப்பாளருமான தீபக்கும் ஒருவர். நடிகர் தீபக் 1999 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜென்மம் எக்ஸ் என்ற திகில் தொடரில் நடித்திருந்தார். அதன்பின்னர் சன் டிவி ஜெயா, டிவி ராஜ் டிவி போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்து வந்தார். இவர் நடித்த பல்வேறு தொடர்கள் பெரும் வெற்றியையும் கண்டது. ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடர் தான். 2009 ஆம் ஆண்டு தொடங்கி 6 வருடங்கள் ஓடிய இந்த தொடர் 1340 எபிசோடுகளை கடந்தது.
அண்ணி, கீதாஞ்சலி, மனைவி, செல்வி, பந்தம், அரசி, திருமதி செல்வம், ரோஜா கூட்டம் என்று இதுவரை 30-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார் தீபக் அதேபோல தனது சிறப்பான நடிப்பிற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார் இவர் நடித்த தென்றல் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது இந்த தொடருக்காக சிறந்த நடிகர் என்ற விருதையும் பெற்றிருக்கிறார் நடிகர் தீபக். தொலைக்காட்சி நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் தீபக் தொகுப்பாளராகவும் இருந்து வந்தார்.
இதையும் பாருங்க : பிகில் படத்தின் குறை இது தான். ட்வீட் செய்த பாவனா. ஆனா, அவர் செய்திருக்கும் தவறு.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் தீபக் தொகுப்பாளராக பணியாற்றி வந்தா.ர் மேலும், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், சூப்பர் குடும்பம், டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் தீபக். நடிப்பில் அசத்தியது போன்று தனது தொகுப்பாளர் பணியிலும் அசத்திய தீபக் தனது ஆங்கரிங் திறமை மூலமும் ரசிகர்களை கவர்ந்தார். ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிவந்த தீபக், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறா.ர் இதுமட்டுமல்லாது நடிகர் தீபக் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.
இதுவரைகாதல் வைரஸ், தகதிமிதா, சரோஜா, உயர்திரு 420 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தீபக். மேலும், இவர் கதாநாயகனாக நடித்த இவனுக்கு தண்ணில கண்டம் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதுமட்டுமல்லாது இதுமட்டுமல்லாது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான என் ஆட்டோகிராஃப், நண்பேன்டா, சூப்பர் மாம் போன்ற பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை தயாரித்தும் இருக்கிறார் தீபக். நடிகர் தீபக் கடந்த 2008 ஆம் ஆண்டு இவர் சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் இவருக்கு அக்னித் என்ற ஒரு மகனும் பிறந்தான்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜீன்ஸ்’ நிகழ்ச்சிக்கு தீபக் தனது மகனுடன் பங்குபெற்றார். இந்த நிலையில் தீபக் தனது மனைவி மற்றும் மகனுடன் கேரளா மாநிலம் திருவனந்தபுறத்திற்கு சென்றுள்ளார். மேலும், மெட்ரோ ரயில், விமானம் என்று ஜாலியாக உற்சுற்றிய புகைப்படங்களை கூட நடிகர் தீபக் தனது சமூக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களில் தீபக்கின் மகனை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி வளர்ந்துவிட்டார் என்று ஆச்சரியபட்டுள்ளனர்.