பிகில் படத்தின் குறை இது தான். ட்வீட் செய்த பாவனா. ஆனா, அவர் செய்திருக்கும் தவறு.

0
2997
bhavana
- Advertisement -

சர்க்கார் படத்தை தொடர்ந்து இளையதளபதி விஜய் அட்லி இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 25ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தை பார்த்த பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பாவனா இந்த படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய பலரும் தற்போது சினிமா சீரியல் என்று படு பிஸியாகிவிட்டார்கள். மேலும், விஜய் தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளினிகள் தான் ரசிகர்கள் மத்தியில் பெரு பிரபலமாக இருந்து வந்தார்கள். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

இதையும் பாருங்க : பிகில் பெண்களுடன் குத்தாட்டம் போட்ட மகள். வீடீயோவை பகிர்ந்த ரோபோ சங்கர்.

- Advertisement -

சமீப காலமாக எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பாவனா சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். அதன் பிறகு அம்மணிக்கு தொகுப்பாளினி வாய்ப்பு படு ஜோராக சூடுபிடிக்க துவங்கியது. நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் கூட தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தார். சமீபத்தில் நடைபெற்ற ப்ரோ கபடி லீக் விளையாட்டிலும் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். எப்போது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பாவனா அடிக்கடி எதாவது பதிவுகளை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் பிகில் படம் குறித்து பதிவிட்டிருந்தார்.

அதில், இதுதான் இன்றைய தேதி வரை வெளியான விஜய் படங்களிலேயே சிறந்த படம் முதல் பாதியை முழுவதும் ரசித்தேன் இயக்குனர் அட்லி நம்மை நன்றாக சிரிக்க வைத்திருக்கிறார் அவருக்கும் அண்ணனுக்கும் இருக்கும் உறவு நன்றாக தெரிகிறது இரண்டாம் பாதி நீளம் குறைவாக இருந்தால் நன்றாக இருக்கும் ஆனால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் பிகில் மாஸ் என்று பதிவிட்டுள்ளார் பாவனாவின் இந்த பதிவை ஏற்ற ரசிகர்கள் சரியாக தான் சொல்றீங்க என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

ஆனால், பாவனா பதிவிட்டுள்ள இந்த பதிவில் நடிகர் விஜய்யை டேக் செய்வதற்கு பதிலாக #Actovijay என்று தவறான டேக்கை பயன்படுத்தியுள்ளார். இதனால் விஜய்யின் சரியான டேக் டேக் செய்யுங்கள் என்று கிண்டல் செய்தும் வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க விஜய்யின் படம் படிபடியாக பல்வேறு திரையரங்குளில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது. வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், பிகில் திரைப்படத்திற்கு மோசமான விமர்சனம் எழுந்துள்ளதால் பிகில் படத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Advertisement