குழந்தைகளை வைத்து மோடியை கேலி – சர்ச்சையில் சிக்கிய ஜீ தமிழ். அண்ணாமலை கண்டனம். காரணம் இந்த வீடியோ தான்.

0
700
annamalai
- Advertisement -

சின்னத்திரையில் சீரியல்கள் மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அதிலும் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து புதுப்புது வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் மக்கள் அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். மேலும், ஒவ்வொரு சேனலும் தன்னுடைய சேனலின் டிஆர்பி ரேடிங்காக புத்தம் புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. பெரும்பாலும் சேனல்களில் அதிகம் பாடல்கள் பாடுவது, நடனம் ஆடுவது, காமெடி நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சியை என பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

அதிலும் சமீப காலமாகவே தொலைக்காட்சிகளில் குழந்தைகள் வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்கள். இது எல்லா சேனல்களிலும் நடந்து வருகிறது. இந்த நிலையில் பிரபல சேனலில் நடந்த காமெடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை கேலி, கிண்டல் செய்யும் விதமாக நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்ட கருத்து தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சி:

தமிழில் ஒளிபரப்பாகும் சேனல்களில் ஜீதமிழ் மிகப்பிரபலமான சேனல். இந்த சேனலில் சீரியல் மட்டுமில்லாமல் பாடல் பாடுவது, குழந்தைகள் காமெடி என்று பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ என்ற குழந்தைகள் காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக சினேகா, மிர்ச்சி செந்தில், பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா நடுவராக இருக்கிறார்கள்.

மோடியை விமர்சித்த வீடியோ:

இந்த நிகழ்ச்சியில் புலிகேசி மன்னர் போன்ற ஒரு வேடத்தில் ஒரு குழந்தையும், மங்குனி அமைச்சர் வேடத்தில் ஒரு குழந்தையும் நடித்திருந்தார்கள். அந்த இரண்டு குழந்தைகளும் பிரதமர் மோடி பற்றியும், கருப்பு பணம் நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட பல நிகழ்வுகளை விமர்சித்து காமெடியாக பேசி இருந்தார்கள். இப்படி இந்த குழந்தைகள் பேசிய காட்சி நேற்றிலிருந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

கண்டனம் தெரிவிக்கும் பாஜக உறுப்பினர்கள்:

மேலும், இதை காமெடியாக பார்க்காமல் பாஜகவின் உறுப்பினர்கள் அரசியல் நோக்கில் பார்த்து இந்த வீடியோவை வைரலாகி வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இது குழந்தைகளுக்கு தெரிகிற விஷயமில்லை. இது வேண்டும் என்று சொல்லித் தந்து கட்சியின் மீது தவறான எண்ணத்தைத் செலுத்துவது போன்று இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்கள். இந்த நிலையில் இந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை டீவ்ட் போட்டிருக்கிறார்.

பாஜக தலைவர் அண்ணாமலை டீவ்ட்:

அதில் அவர், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு எல். முருகன் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி ஷோவில் பிரதமர் மோடியின் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகள் வைத்திருப்பதை பற்றி கேட்டிருந்தார். அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அவருக்கு நன்றி என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த டீவ்ட்க்கு கார்த்திக் சிதம்பரம், காங்கிரசை சேர்ந்த லட்சுமி ராமசந்திரன் உள்ளிட்டோர் சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு காமெடி நிகழ்ச்சிக்கு இவ்வளவு அலப்பறையா? என்றும் நிகழ்ச்சியில் கூட அரசியல் செய்யாதிருக்க மாட்டீர்களா? என்றும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

Advertisement