ஊரடங்கில் சத்தமில்லாமல் திருமணம் முடித்த செம்பருத்தி சீரியல் நடிகர்.

0
2103
kathir
- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில் செம்பருத்தி ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை மையமாக கொண்ட தொடர். இந்த தொடர் தெலுங்கு மொழியில் வந்த முத்த மந்தாரம் என்ற தொடரின் தழுவல். இந்த செம்பருத்தி தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இருந்தாலும் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில் இந்த தொடரில் ஆதியின் தம்பியாக நடித்து வரும் கதிருக்கு தற்போது திருமணம் முடிந்து உள்ளது. இவர் சீரியல் நடிகர் மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா என்பதால் சத்தமே இல்லாமல் தன்னுடைய திருமணத்தை செய்துள்ளார் நடிகர் கதிர்.

- Advertisement -

இவரது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர் கதிரின் திருமண நிட்சயதார்த்தம் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட கதிர், எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. லாக்டவுன் காரணமாக நிறைய பேரை அழைக்க முடியாமல் போனது. என்னை மன்னித்துவிடுங்கள்.

லாக்டவுன் நேரத்தில் இ-பாஸ் பிரச்சினைகள் காரணமாக தான் நிறைய பேரை அழைக்க முடியவில்லை. கல்யாணத்திற்கு நிச்சயம் அனைவரையும் அழைப்பேன். எல்லோரும் கண்டிப்பாக வந்து எனக்கு வாழ்த்துக் கூறுங்கள். உங்களுடைய அனைவரது வாழ்த்துகளையும் பெற நான் காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement