பிரபல தமிழ் இயக்குனரிடம் ஹீரோயின் வாய்ப்பு கேட்ட ரௌடி பேபி சத்யா – அவரின் பதில பாருங்க.

0
627
ayesha
- Advertisement -

யானை படம் இயக்குனர் ஹரியைப் பார்த்து சத்யா சீரியல் நடிகை கேட்ட கேள்வி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சீரியல் சத்யா. இந்த தொடர் காதல் கதையை மையமாக கொண்ட தொடர். மேலும், ஜீ பெங்காலி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிந்துரா பிந்து’ என்ற ஒடியா மொழித் தொடரின் மறு ஆக்கம் தான் சத்யா சீரியல். இந்த சத்யா தொடரில் ஆயிஷா மற்றும் விஷ்ணு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், ஆண் இயல்பு கொண்ட பெண்ணான சத்யாவின் வாழ்வை மையமாக கொண்டது தான் சத்யா சீரியல். இந்த தொடர் ஒளிபரப்புச் செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை சிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இந்த சீரியலின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இரண்டாம் பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் பல திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

ஆயிஷாவின் சின்னத்திரை பயணம்:

மேலும், இந்த தொடரில் டாம் பாய்யாக நடித்து வருபவர் நடிகை ஆயிஷா. இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான`பொன்மகள் வந்தாள்’ என்ற சீரியலில் தான் நடித்து இருந்தார். அதன் பின்பு மாயா என்ற சீரியலில் நடித்தார். அந்த தொடர் மூலம் இவருக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து இருந்தது. ஆனால், அந்த சீரியல் முடிவுக்கு வந்தது. அதன் பின் ஆயிஷா பிரபல தொலைக்காட்சி தயாரிக்கும் சத்யா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

ஆயிஷா நடிக்கும் சீரியல்கள்:

மேலும், இவர் தமிழ் மொழி சீரியல் மட்டுமல்லாது வேறு மொழி சீரியலிலும் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை ஆயிஷாவின் துணிச்சலான நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் யானை படம் இயக்குனரை பார்த்து ஆயிஷா கேட்டு இருக்கும் கேள்வி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் அருண் விஜய். தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் யானை. இயக்குனர் ஹரி இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

யானை படம்:

இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராதிகா, யோகி பாபு, இமான் அண்ணாச்சி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும், கேஜிஎஃப் படத்தில் கருடனாக நடித்த ராம் வில்லனாக படத்தில் படத்தில் நடித்திருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் ஜூலை 1-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் புரமோஷனுக்காக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கோலிவுட் மேன்சன் நிகழ்ச்சியில் யானை படக்குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

ஆயிஷா கேட்ட கேள்வி:

இந்த நிகழ்ச்சியில் ஹரி இயக்கத்தில் வெளியான படங்களின் நாயகன் கெட்டப்புகளில் லிட்டில் சூப்பர் ஸ்டார் குழந்தைகள் பங்கேற்று பர்பாமென்ஸ் செய்து பட்டைய கிளப்பி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் சத்யா சீரியல் நாயகி ஆயிஷா போலீஸ் கெட்டப்பில் வந்து இயக்குனரிடம் ஹீரோவை வைத்து மாசான படம் எடுத்து விட்டீர்கள் சார். என்ன மாதிரி ஹீரோயினி வைத்து படம் எப்போ எடுக்க போறீங்க? என்று கேட்டிருக்கிறார். இந்த கேள்வியால் பதறிப்போன இயக்குனர் ஹரி என்னம்மா இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுட்ட! என்று பதில் அளித்திருக்கிறார். இதுகுறித்த புரோமோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement