‘ரியல் ஜோடிகளான ரீல் ஜோடி’ இன்று கோலாகலமாக நடைபெற்ற மதன் – ரேஷ்மா திருமணம். வெளியான புகைப்படங்கள்.

0
832
MadhanReshma
- Advertisement -

வெள்ளித்திரையை போல சின்னத்திரையிலும் பல்வேறு நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக சீரியலில் ரீல் ஜோடியாக நடித்த பல நடிகர் நடிகைகள் ரியல் ஜோடிகளாக மாறி இருக்கின்றனர். அந்த வகையில் இந்த லிஸ்டில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருக்கின்றனர் மதன் மற்றும் ரேஷ்மா ஜோடி. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.

-விளம்பரம்-

ஒரு காலத்தில் ஜீ தொலைக்காட்சி சேனல் நம்பர் என்ன என்பது கூட தொலைக்காட்சி ரசிகர்களுக்கு தெரியாது. ஆனால், சமீப காலமாக தொலைக்காட்சி ரசிகர்கள் பலரும் ஜீ தமிழ் தொழிகாட்சியின் ரசிகர்களாக மாறியுள்ளனர். அதற்கு முக்கிய காரணமே தற்போது இந்த தொலைகட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு புதிய தொடர்கள் தான்.

இதையும் பாருங்க : சந்தானம் , புகழ் பட போஸ்டருக்கு எதிர்ப்பு – தியேட்டர் முன் போராட்டம் என பெரியார் கழகம் அறிவிப்பு.

- Advertisement -

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சுடவா ‘ தொடர் மாபெரும் ஹிட் அடித்தது. இந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்த ரேஷ்மா, டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார். இந்த நிலையில் நடிகை ரேஷ்மா ‘கனா காணும்’ சீரியல் மூலம் பிரபலமான மதன் மீது காதலில் விழுந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த ஜனவரியில் தான் தங்கள் காதலை அறிவித்து இருந்தார்கள். தற்போது இவர்கள் இருவருமே ‘அபி டைலர்’ என்ற தொடரில் நடித்து வருகின்றனர். ரீல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் தற்போது ரியல் ஜோடியாக மாறி இருக்கின்றனர். இவர்கள் திருமணம் இன்று கோலாகளமாக நடைபெற்று உள்ளது.

-விளம்பரம்-
Advertisement