சந்தானம் , புகழ் பட போஸ்டருக்கு எதிர்ப்பு – தியேட்டர் முன் போராட்டம் என பெரியார் கழகம் அறிவிப்பு.

0
407
santhanam
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் சபாபதி. இந்த படம் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்த படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை ஆர் கே என்டர்டெயின்மென்ட் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரித்திருக்கிறார். இயக்குனர் ஆர் ஸ்ரீநிவாச ராவ் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் நவம்பர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் சந்தானம், புகழ், எம்எஸ் பாஸ்கர், சாயாஷி உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

-விளம்பரம்-
sabapathy - Twitter Search / Twitter

இந்த நிலையில் சபாபதி படத்தின் விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட பல அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சபாபதியில் வேலையில்லாத திக்குவாய் இளைஞனாக சந்தானம் நடித்து இருக்கிறார். வழக்கம் போல் படத்தில் காதலுக்காக சந்தானம் அலைகிறார். அந்த சமயம் சந்தானத்துக்கு பணம் கிடைக்க கூடவே அரசியல்வாதி வடிவத்தில் பிரச்சனையும் வருகிறது. இதையெல்லாம் ஒன்று சேர்த்த காமெடி கலந்த செண்டிமெண்ட் படம் தான் சபாபதி.

இதையும் பாருங்க : பிறந்தநாளில் கணவருடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட வித்யு லேகா.

- Advertisement -

மேலும், சபாபதி படத்தின் போஸ்டரில் தண்ணீர் திறந்துவிடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர் என்று எழுதப்பட்டுள்ள சுவரின் மீது சந்தனம் சிறு நீர் கழிப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது. இதை பார்த்து பலரும் சபாபதி படத்தின் மீதும் சந்தானத்தின் மீது கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நகைச்சுவை என்ற பெயரில் தண்ணீருக்காக போராடுகின்ற மக்களையும், போராட்டக்காரர்களையும் இழிவுபடுத்து போன்று இதெல்லாம் இருக்கிறது என்றும் இந்த மாதிரி மனித நேயமற்ற செயல்களை திரைப்படம் ஆக்குவதை கண்டித்தும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

அதோடு உடனடியாக திரைபடத்தில் இந்த காட்சியை நீக்க வேண்டும் என்றும் இந்த மாதிரி காட்சிகளை வெளிகூடாது என்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்துகின்றனர். அதிலும் உடனடியாக அந்தத் திரைப்படத்தில் இந்தக் காட்சியை நீக்க வேண்டும். வெளியிட்டிருக்கின்ற படங்களை (stills) திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீருக்காக போராடுகின்ற மக்கள் அனைவரும் திரையிடப்படும் திரையரங்குகள் முன்னால் போராட்டம் நடத்துவோம் என்பதை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்துக் எச்சரிக்கை அறிவித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த படம் ஹாலிவுட்டில் 2008ஆம் ஆண்டு வெளியான ரோல் மாடல்ஸ் என்ற திரைப்படத்தின் போஸ்டரை காப்பி அடித்தது என்று ஒரு புது சர்ச்சை சோசியல் மீடியாவில் எழுந்து உள்ளது.

-விளம்பரம்-
Advertisement