காட்டுக்குள்ள பிக் பாஸ் ஷோவ காட்டறீங்க – சர்வைவர் நிகழ்ச்சி Scripted என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
23642
survivor
- Advertisement -

சமீபகாலமாகவே ஒவ்வொரு சேனலும் தங்களின் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமாக நிகழ்ச்சிகளைக் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி சர்வைவர் என்ற ஒரு ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்புகிறார்கள். வெவ்வேறு குணாதிசியங்கள் நிறைந்த மனிதர்களை சவால்கள் நிறைந்த ஓரிடத்தில் ஒன்று சேர்த்த பிறகு அவர்கள் கொடுக்கும் சவால்களை கடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சர்வைவர்.

-விளம்பரம்-

மேலும், ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சர்வைவர். நடிகர் அர்ஜுன் முதல் முறையாக தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகிறார். சவால்கள் நிறைந்த தனித்தீவில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

இதையும் பாருங்க : அண்ணா பிறந்தநாளில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய அலப்பறையான போஸ்டர் – வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

- Advertisement -

இந்த ஷோ மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதே போல இந்த ஷோ ஆரம்பித்த சில நாட்களிலேயே சில சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறது. பொதுவாக ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி ஆரம்பித்தாலே அதில் நடக்கும் விஷயங்கள் ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு ஸ்கிரிப்ட் தான் என்ற விமர்சனங்கள் விழுந்துவிடும், அதற்கு இந்த சர்வைவர் நிகழ்ச்சியும் விதிவிலக்கா.

நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பெசன்ட் ரவி மற்றும் அம்ஜத் இருவரும் உணவு தேடி தீவை சுற்றிப் பார்க்கும்போது அங்கே ஒரு கிழங்கு செடி இருப்பதை கண்டுபிடிக்கின்றனர். அதுவும் அம்ஜத் அந்த செடியை பார்த்த அடுத்த கணமே அண்ணே அது ஏதோ கிழங்கு செடி மாதிரி இருக்கு அண்ணே என்று சொன்னதும் உடனே பெசன்ட் ரவியும் ஆமா ஆமா இது ஆள வள்ளி கிழங்கு போல இருக்கிறது எதுக்கும் கிட்ட போய் இலையை பார்ப்போம் என்று சொல்லிவிட்டு பின்னர் அந்த செடிக்கு அருகில் செல்கின்றனர்.

-விளம்பரம்-

பொதுவாக கிழங்கு செடிகள் மண்ணுக்கு அடியில் மிகவும் இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கும். ஆகையால் அதனை அவ்வளவு எளிதாக எடுத்து விட முடியாது. ஆனால், பெசன்ட் ரவியோ அதனை மிகவும் எளிதாக பிடுங்கி விட்டார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அதை ஏற்கனவே யாரோ நட்டு வைத்தது போல இருக்கிறது என்று கூறி வருகின்றனர். இந்த ஒரு விஷயம் மட்டும் கிடையாது போட்டியாளர்களுக்கு என்ன டாஸ்க் செய்ய வேண்டும் என்பதை ஒரு பாட்டிலில் அடைத்து வைத்து தங்க விட்டுள்ளனர்.

ஆனால், அதை ஏதோ எதேச்சையாக கண்டுபிடித்தது போல காண்பித்தனர் அதேபோல அந்த தீவில் இருக்கும் வாழை மரங்கள் தென்னை மரங்கள் அனைத்தும் சீரான இடைவெளியோடு இருக்கின்றது. பொதுவாக தீவிலோ காட்டிலோ வளரும் மரங்கள் இப்படி சீரான இடைவெளிகளில் வளராது இதுபோன்ற பல்வேறு நம்பகமற்ற விஷயங்கள் இருப்பதால் பிக்பாஸில் போல இந்த நிகழ்ச்சியும் ஒரு ஸ்கிரிப்ட் நிகழ்ச்சிதான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement