பிரபல ஜீ தொலைக்காட்சியின் இளம் பெண் தொகுப்பாளினி தற்கொலை..!

0
863
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக சீரியல் நடிகர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் பிரபல ஜீ தொலைக்காட்சி தொகுப்பாளினி  ராதிகா கௌசிக் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சின்னத்திரை நடிகர்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

ராஜஸ்தான் Zee தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த ராதிகா கௌசிக் என்ற தொகுப்பாளினியே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.நேற்று (டிசம்பர் 14)அதிகாலை 3.30 மணியளவில் அவர் வசித்த அடுக்கமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து இவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

- Advertisement -

பின்னர் , சம்பவம் தொடர்பில் காவற்துறைக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து , சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் தொடர்பில் ராஜஸ்தான் காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணைசெய்துள்ளனர்.அந்த விசாரணையில் சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது.

தொகுப்பாளினி ராதிகா,அவரின் நண்பரும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ராகுல் என்பவர் வசித்து வந்துள்ளதாகவும், சம்பவத்தன்று இருவருக்கும் கடுமையான வாக்கு வாதம் நடந்துள்ளதாகவும் , பின்னர் ராகுல் குளியலறை சென்ற போது தான் ராதிகா இவ்வாறு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement