பிக் அப் 6 ரூபாய்..!டெலிவரி 11 ரூபாய்..!வழில நிறுத்தக்கூடாது..!zomato ஊழியர்களின் பரிதாப பின்னனி..!

0
1749
Zomoto
- Advertisement -

வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவை டெலிவரி செய்ய புறப்பட்ட ஸொமாட்டோ ஊழியர் ஒருவர் நடு ரோட்டின் ஓரம் நின்று கொண்டு ஒவ்வொரு பாக்கெட்டாக உணவை சுவைத்துவிட்டு பின்னர் எடுத்தது தெரியாமல் இருக்க தில்லாங்கடி வேலைகளை உணவு பொட்டலத்தில் செய்கிறார். 

-விளம்பரம்-

அந்த வீடியோ வைரலாக பரவி வர அந்த ஊழியர் உடனடியாக பணி நீக்கம் செய்து ஸொமாட்டோ நிறுவனம் உத்தரவிட்டது. ஆனால், இது போன்ற வேலையில் உள்ளவர்களுக்கு சோகமான மற்றும் கடினமான பின்னணியும் இருக்கிறது. 

- Advertisement -

இதுகுறித்து டெலிவரி பாய் பணி செய்யும் சென்னை கல்லூரி மாணவர் விக்னேஷ் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.அதில், 
உணவு பிக் அப் – 6 ரூபாய், டெலிவரி – 11 ரூபாய், இதைத் தவிர ஒரு கிலோமீட்டருக்கு 4 ரூபாய் கிடைக்கும். இதையெல்லாம் சேர்த்த குறைந்தபட்சம் ஒரு டெலிவரிக்கும் 50 ரூபாய் கிடைக்கும். ரொம்ப பக்கத்துல டெலிவரின்னா 30 ரூபாய் கிடைக்கும். வாடிக்கையாளர் உணவு டெலிவரி ஆனதும் ஸ்டார் குடுப்பாங்க. அது குறைந்தாலும், அவங்க போடவே இல்லைனாலும் எங்க கூலிக்கு ஆப்புதான். 

சில சமயம் பசி நேரத்துல உணவைக் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய சூழல்வரும். பெரிய பெரிய ஹோட்டல்ல ஆர்டர் எடுக்கும்போது சாப்பிடவும் தோணும். ரொம்ப பசிச்சா வழியில் இருக்கும் கடைகள்ல சாப்பிடுவோம். ஒரு வாடிக்கையாளரோட ஆர்டர் எடுத்துட்டோம்னா வழியில் எங்கயுமே நிற்கக்கூடாது. அவங்களுக்கு மேப்ல நாங்க ஒரு இடத்துல நிக்குறது காட்டி கொடுத்துடும். எனவே அந்த சமயத்துல கொல பசியெடுத்தாலும் சாப்பிட முடியாது. டெலிவரிலாம் முடிஞ்ச பிறகுதான் சாப்பாடு.

-விளம்பரம்-
Advertisement