சமீப காலமாகவே இந்திய திரையுலகை சேர்ந்த நடிகர்கள் பலர் அநியாயமாக உயிரிழந்து வருகின்றனர். ரிஷி கபூர், இர்பான் கான், சிரஞ்சீவி சார்ஜா, டாக்டர் சேதுராமன் போன்ற பிரபல நடிகர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், கடந்த சில நாடளுக்கு முன்னர் இறந்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தான் ஒட்டுமொத்த திரையுலகையும் உலுக்கியது, காரணம் 34 வயதில் அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் தூக்கு போட்டு இறந்தது தான்.
நடிகர் சுஷாந்த் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார். பின்னர் குரூப் டான்சராகவும், சிறு சிறு கதாபாத்திரத்திலும் சினிமாவில் கால் பதித்த சுஷாந்த், பின்னர் பாலிவுட் சினிமாவில் ஒரு ஹீரோவாக வலம் வந்தார். எத்தனையோ படங்களில் இவர் நடித்தாலும், இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் தான் இவருக்கு இந்திய அளவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சுஷாந்த் கடந்த சில காலமாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் அதற்கு மருத்துவ ஆலோசனைகளையும் மேற்கொண்டு வந்தார்.இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் சுஷாந்த்தின் இறப்பை தாங்க முடியாமல் 10 வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 10 வகுப்பு மாணவர் ஒருவர் சுஷாந்த்தின் தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார். சுஷாந்த் இறப்பை தாங்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டுள்ள மாணவர் ‘உங்களால் முடியவில்லை என்றால் என்னாலும் முடியாது’ என்று தற்கொலை குறிப்பையும் எழுதியுள்ளார்.