அதிமுக மதுரை மாநாட்டினால் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு இத்தனை கோடி நஷ்டமாம்! பகீர் தகவல்.

0
776
- Advertisement -

மதுரையில் ஞாயிறு அன்று நடைபெற்ற அதிமுகவின் எழுச்சி மாநாடு ஞாயிறு அன்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அது நல்லதாக முடிந்த நிலையில் நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதில் உணவு வீண் அடிக்கப்பட்டது, திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி குறித்து அவதூறு மேலும் சுங்கச்சாவடிக்கு இழப்பு என்று பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு ஞாயிறு மதுரையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் வருகை தந்தனர்.

-விளம்பரம்-

லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த மாநாட்டிற்கு வருகை தந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன் மூலம் லட்சக்கணக்கான தொண்டர்களும் வருகை தந்தனர். வந்த அனைவருக்கும் மூன்று இடங்களில் தொண்டர்களுக்காக உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மாநாட்டில் லட்ச கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் உணவு கூடங்களில் சுமார் 10,000 தொழிலாளர்கள் உணவுகளை சமைத்து அங்கு வந்த தொண்டர்களுக்கு பரிமாறி வந்ததாக அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா கூறியிருந்தனர்.

- Advertisement -

நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த மாநாட்டில் காலை முதலே அங்கு வந்த தொண்டர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. அங்கு வந்த தொண்டர்களுக்கு மூன்று வேலை மட்டுமல்லாமல் இரவு வரை உணவுகள் வழங்கபட்டது. ஞாயிறு மாநாடு முடிவடைந்த நிலையில் அங்கு தொண்டர்களுக்கு தயார் செய்த.

புளியோதரை உணவுகள் அங்கு அண்டா அண்டாவாக கொட்டப்பட்டு வீண் அடிக்கப்பட்டது. கொட்டப்பட்டு இருந்த உணவுகளின் மீது வாகனகள் ஏறி சென்றுள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

சுங்கசாவடிக்கு இழப்பு

ஞாயிறு அன்று மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பக்கங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் அந்த மாநாட்டிற்கு வருகை தந்தனர். வந்த வாகனகள் அனைத்தும் சுங்க கட்டணம் செலுத்ததால் நெடுச்சாலை துறைக்கு 20 கோடி வரை இழப்பு ஏற்பட்டுளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 6600 கி.மீ  துரத்தில் நெடுச்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிறு அன்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு வாகனகளில் மாநாட்டிற்கு சென்றனர்.

அவர்கள் சுங்க கட்டணகள் மின்னணு தொழில்நுட்பத்தில் பாஸ்டாக் கணக்கில் பணம் இல்லாமலும் சுங்க சாவடிகளில் வாகன எண்னை பதியு செய்ய அனுமதிக்கத்தாலும் அவர்கள் பணம் கட்டாமலும் சென்றனர். அதனை தொடர்ந்து வந்த சரக்கு வாகனக்களும் பணம் செலுத்தாமல் சுங்கச்சாவடியை கடந்து சென்றது என்றும் தகவல்கள் வெளியின. இதனால் தேசிய நெடுச்சாலை துறைக்கு  20 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுளதாகவும் இது ஒவ்வொரு சுங்கச் சாவடிகளின் தினசரி வருவாயில் 5% வரை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.      

Advertisement