தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையில் மாநில தலைவர் அண்ணாமலையின் பர்ஸ் திருடு போனது. இது கூறித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 27 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது. அதில் இன்று மதுரையில் மேலூரில் யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அண்ணாமலையின் பர்ஸ் கடந்த புதன் அன்று காணமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதயாத்திரை:
தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா குறிப்பிட்டிருந்தார். இதில் தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் அந்தந்த கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார்.
பாதயாத்திரைக்கு இடையில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை நரேந்திர மோடியை மூன்றாவது முறை பிரதமரக்குவோம் என்றும் கூறினார். மோடி என்ன செய்தார் என்ற புத்தகத்தை வெளியிடுவதாக அவர் கூறியிருந்தார். மேலும் இதில் தொடக்க நாளில் கலந்து கொண்டு பாதயாத்திரை தொடங்கி . வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்துள்ளனர் என்றும், திமுக காங்கிரஸ் ஒட்டு கேட்டு வந்தால் அவர்களுக்கு 2ஜி ஊழல் நிலக்கரி பற்றி தான் அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர் பாதயாத்திரை தொடங்கி வைத்தார்.
அண்ணாமலையின் காணமல் போன பர்ஸ்:
கடந்த புதன் கிழமை 2 ஆம் தேதி அன்று பாஜக மாநில தலைவர் அறந்தாங்கியில் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அன்று இரவு 7 மணியளவில் அவரது பர்ஸ் காணமல் போகியுள்ளது அதை யாரோ திருடி விட்டதாக அர்ஜுன மூர்த்தி என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் 25 ஆயிரம் ரொக்க பணமும் 4 கிரிடிட் கார்டுகள் (AMEX ,CITI, HDFC, AXIS) இருந்ததாகவும் அவர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். உழலை எதிர்த்து செய்த பாதயாத்திரையில் மாநில தலைவரின் பர்ஸ் காணமல் போனது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.