சிட்டிசன் மீனா ரோலில் முதலில் கமிட் ஆனது இந்த சீரியல் நடிகைதானம். இப்போ சினிமாவில் ஆல் அட்ரஸ்ஸே இல்ல. (விக்ரமிற்கே ஜோடியா நடிச்சவங்க)

0
990
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் அஜித்தின் ‘சிட்டிசன்’ திரைப்படம் வெளியாகி இன்று (ஜூன் 8, 2001) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் மீனாவி நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் விக்ரம் பட நடிகை. ஆட்டிட்மேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சிட்டிசன் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் அஜித் அப்பா, மகன் என்று இரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல இந்த படத்தில் பலவிதமான கெட்டப்புகளில் வந்து அசத்தியிருப்பார் அஜித்.

-விளம்பரம்-
May be an image of 2 people

இந்த படத்தில் மகன் அஜித்திற்கு ஜோடியாக பின்னணி பாடகி வசுந்தரா நடித்திருந்தார். அதே போல பிளாஸ் பேக்கில் வரும் அப்பா அஜித்திற்கு மனைவியாக பிரபல நடிகை மீனா நடித்திருந்தார். ஆனால், மீனா கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது வேறு யாரும் இல்லை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமதி செல்வம்’ தொடரில் நடித்த அபிதா தான். பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது’ திரைப்படம் விக்ரம் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது.

- Advertisement -

விக்ரமிற்கு சசீயான் என்ற பட்டப்பெயரை கொடுத்ததும் இந்த படம் தான். இந்த படத்தில் அபிதா குஜலாம்பாள் என்ற கதாபத்திரத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபிதா.அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்த்த இவருக்கு பெரிய ஹிட் படங்கள் அமையவில்லை சேது படத்திற்கு பின்னர் தமிழில் சீறி வரும் காலை, பூவே பெண் பூவே போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.

அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்பு குறையவே சீரியல் பக்கம் திரும்பினார்.சேது படத்திற்கு பின்னர் சிட்டிசன் படத்தில் மீனா கதாபாத்திரத்தில் இவர் தான் நடிக்க இருந்தார் ஆனால் அந்த பட வாய்ப்பைக் கூட இவர் நிராகரித்து விட்டாராம் அதன் பின்னர் ஏன் அந்த பட வாய்ப்பை மிஸ் செய்தோம் என்று மிகவும் கஷ்டப்பட்டாராம். இந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement