பூர்வீக கிராமத்தில் இருக்கும் விஜயகுமார் வீடு – அருண் விஜய் பின்பற்றி வரும் சென்டிமென்ட். என்ன தெரியுமா ?

0
1708
vijayakuamr
- Advertisement -

நடிகர் விஜயகுமாரின் பூர்வீக ஊர் மற்றும் வீடு குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜயகுமார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். 1961 இல் வெளிவந்த ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக குழந்தை நட்சத்திரமாக நடித்து தன்னுடைய நடிப்பு பயணத்தைத் தொடங்கினார் விஜயகுமார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் கதாநாயகனாகவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். தற்போது விஜயகுமார் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அதேபோல் இவருடைய மகன் அருண்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

விஜயகுமார் நடித்த படம்:

இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டு வருகிறார். அதுமட்டும் இல்லாமல் விஜயகுமாரின் மகள்களும் படங்களில் நடித்திருந்தார்கள். சமீபத்தில் விஜயகுமார், விஜயகுமாரின் மகன் அருண் விஜய், அருண் விஜய்யின் மகன் ஆகிய மூன்று பேருமே சேர்ந்து நடித்திருந்த படம் ஓ மை டாக் . இந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

விஜயகுமார் குடும்பம்:

மேலும், விஜய குமாருக்கு இரண்டு மனைவிகள். 5 பெண்கள் மற்றும் 1 ஆண் பிள்ளை இருப்பது நமக்கு தெரியும். விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தான் முதல் மனைவி. அதன் பின்னர் தான் விஜயகுமார் 1976ல் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் தான் அருண் விஜய், அனிதா , கவிதா. மேலும், மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி.

-விளம்பரம்-

விஜயகுமாரின் பூர்வீக ஊர்:

இந்நிலையில் நடிகர் விஜயகுமாரின் பூர்வீக ஊர் மற்றும் வீடு குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நாட்டுச் சாலை என்ற கிராமத்தில் பிறந்தவர் தான் விஜயகுமார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மிக பசுமையான தோப்புகள் நிறைந்த ஊராக இது உள்ளது. இவர் 1943 இல் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் பஞ்சாட்சரம் ராமசாமி பிள்ளை. சினிமாவிற்காக தான் இவர் விஜயகுமார் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். இவருடைய தந்தை பெயர் ராமசாமி பிள்ளை, அம்மா பெயர் சின்னம்மாள். தன்னுடைய கிராமத்திலேயே விஜயகுமாருக்கு சொந்தமாக வீடு ஒன்று இருக்கிறது.

விஜயகுமார் வீடு:

முதலில் இந்த வீடு பழமையாக இருந்தது. அதை புதுப்பித்து விஜயகுமார் அழகாக கட்டியிருக்கிறார். மொத்த குடும்பமும் தங்கி செல்லும் வகையில் இவர் வீடு கட்டியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் வீட்டின் முன்பு தன்னுடைய இரண்டு மனைவிகளுடைய சிலையை வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் தன்னுடைய அம்மா அப்பாவிற்கும் சிலை வைத்திருக்கிறார். அருண் விஜய் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ரிலீசின் போதும் தன்னுடைய தாத்தா, பாட்டியின் சிலை முன்பு பேனர் வைத்து வணங்கி விட்டு தான் செல்வார். இவர் நடிகராக இருந்தாலும் ஊர் மக்களோடு நன்றாக தான் பழகிருக்கிறார். இன்னும் அவரை மறக்காமல் மக்களும் நல்ல விதமாகத்தான் சொல்கிறார்கள்.

Advertisement