‘கடந்த மாதம் என்ன வீழ்த்த பார்த்த போது’ – சூர்யாவிற்கு நன்றி தெரிவித்து அமீர் வெளிட்ட அறிக்கை.

0
495
- Advertisement -

கடந்த சில வாரங்களாக பருத்திவீரன் விவகாரம் தான் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் அமீர் மற்றும் ஞானவேல் மாறி மாறி விமர்சனங்களை வைத்து வந்த நிலையில் பல்வேறு சினிமா பிரபலங்கள் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து தனது கருத்திற்கு வருத்தம் தெரிவித்தார் ஞானவேல். இந்த விவகாரத்தில் சூர்யாவோ கார்த்தியோ எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் சூர்யா குறித்து அமீர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அது வேறு ஒன்றும் இல்லை அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘மௌனம் பேசியதே’ படம் இன்றோடு வெளியாகி 21 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சூர்யா, நந்தா, லைலா, திரிஷா என்று பலர் நடித்து இருந்தனர். இதுவே அமீரின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

- Advertisement -

இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இதனால் 21yearsofmounampesiyade என்ற ஹேஷ் டேக்கை போட்டு சமூக வலைத்தளத்தில் பலர் இந்த படம் குறித்து பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ மரியாதைக்குரிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், பேரன்புக்கும் பாசத்துக்கும் உரிய தமிழக மக்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்த போது, நான் சோர்ந்துவிடாமலும் துவண்டுவிழாமலும் பார்த்துக் கொள்ளும் விதமாக எனக்குத் தன்னம்பிக்கையையும், அன்பையும், ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு எனக்களித்த தமிழக ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் ஊடகத் துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

-விளம்பரம்-

ஒரு இயக்குநராக எனக்கு அடையாளத்தைப் பெற்று தந்த என்னுடைய முதல் திரைப்படம் ‘மௌனம் பேசியதே’ வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையை நோக்கி – சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை.

அப்படி கனவுகளைச் சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னைக் கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரைக்கனவை நனவாக்கிய, ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கணேஷ் ரகு மற்றும் வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் ஃபிலிம்ஸ் நிறுவனத்தாருக்கும், என்னோடு பயணித்து திரைப்படத்தின் வெற்றிக்குக் கரம் கொடுத்த சூர்யா, த்ரிஷா, லைலா உள்ளிட்ட நடிகர் – நடிகைகளுக்கும், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் என் நன்றிகள்.

ஒரு இயக்குநராக எனக்கு அடையாளத்தைப் பெற்று தந்த என்னுடைய முதல் திரைப்படம் ‘மௌனம் பேசியதே’ வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையை நோக்கி – சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Advertisement