கொள்ளுப் பாட்டி முதல் பேத்தி வரை – ஒரே வீட்ல 4 தமிழ் ஹீரோயின்ஸ் – இன்று பிறந்தநாள் கொண்டாடும் லக்ஷ்மியின் அறிந்திராத பக்கம்.

0
346
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் லட்சுமி. இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். லட்சுமியின் தந்தை மற்றும் தாய் இருவருமே சினிமா துறையில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் இரண்டு ருக்மணிகள் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர் ஆர்கே ருக்குமணி மற்றொருவர் குமாரி ருக்மணி. ஆர்.கே ருக்மணி 30 மற்றும் 40 களில் தமிழ் சினிமா மற்றும் நாடனங்களில் சிறந்து விளங்கினார். இவர் சினிமா குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் தான். அதே போல பாரிஸ் பியூட்டி என அழைக்கப்பட்டார் தான் குமாரி ருக்மணி. இவர் தமிழ் சினிமாவில் 30களின் இருந்து 70களின் இறுதி வரையில் சிறந்த நடிகையாக கருதப்பட்டார்.

-விளம்பரம்-

குமாரி ருக்மணியின் தாய் ஜானகி அவரும் ஒரு நடிகை தான். இவர்களின் பூர்வீகம் தஞ்சாவூர். நடிகை ருக்மணியும் சிறிய வயதாக இருக்கும் போதே இவர்களின் குடும்பம் சென்னைக்கு குடியேறி வந்துள்ளனர். இவர் தன்னுடைய ஒன்பது வயதிலேயே படத்தில் நடிக்க தொடங்கினார். அதே போல லக்ஷ்மி இயக்குநர் மல்லியம் ராஜகோபாலால் தான் இவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டார். இந்த படம் 1968 ஆம் ஆண்டு ஜீவனாம்சம்.

- Advertisement -

நடிகை லட்சுமி திரைப்பயணம்:

அதன் பின் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் 70 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். பின் இடையில் இவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதற்குப் பிறகு மீண்டும் இவர் குணசித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார்.தற்போது இவர் பாட்டி, அம்மா போன்ற எல்லா வேடங்களிலும் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட இவர் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இதுவரை இவர் மூன்று தேசிய விருதுகள், மூன்று நந்தி விருது, பல்வேறு விருதுகளையும் வாங்கி இருக்கிறார். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் கூட நடிகை லட்சுமி அவர்கள் உடல்நிலை குறைவால் இறந்து விட்டதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவி இருந்தது. ஆனால், இதை விசாரித்த போது தான் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயில் யானை இறந்தது என தெரியவந்தது.

-விளம்பரம்-

நடிகை லட்சுமி பேட்டி:

பின் இது தொடர்பாக வீடியோவில் லட்சுமி, பிறந்தால் இறந்து தானே ஆகணும். இதுக்கெல்லாம் பயப்பட போவதில்லை, கவலைப்படவும் ஆகணும். ஆனால், வேலை வெட்டி இல்லாதவங்க இதை பரப்பிட்டு இருக்காங்க. நான் ரொம்ப ஆரோக்கியமாக இருக்கேன் என்று கூறி இருந்தார்.இந்நிலையில் சமீபத்தில் நடிகை லட்சுமி பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், நான் இளைஞர்கள் சுற்றி இருக்க அவர்களுடன் பணிபுரிய செய்ய ஆசைப்படுகிறேன்.

லட்சுமி பிறந்தநாள்:

நம் அனைவருக்குமே இறந்த காலம் என்ற ஒன்று இருக்கும். ஆனால், எதிர்காலம் இருக்குமா என்று தெரியாது. ஆனால், அவர்களுக்கு எதிர்காலம் இருக்கிறது. அவர்கள் நல்ல பலத்துடன் வருகிறார்கள் என்று கூறி இருக்கிறார். இப்படி குழந்தையாக நடிக்க தொடங்கி தற்போது பாட்டியாக இரண்டு தலைமுறைகளைக் கடந்த நடிகை லட்சுமிக்கு பிறந்தநாள் இன்று. இவருடைய பிறந்தநாளுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement