8 கோடி பட்ஜெட், வெற்றிகரமான 150 நாள், Climax ஷூட்டில் தெரிந்த அஜித்தின் மாஸ் – 22 ஆண்டுகளை நிறைவு செய்த சிட்டிசன்.

0
2330
Citizen
- Advertisement -

ஒரே படத்தில் பல கெட்டப்பில் தோன்றுவது சிவாஜி தான் என்று இருந்த நிலையில் அவருக்கு அடுத்து பல கெட்டப்புகளை போட்டு கமல் பன்முக கலைஞன் என்ற பெயரை எடுத்தார். கமலுக்கு அடுத்து வந்த விஜய், அஜித், பிரசாந்த் என்று டாப் நடிகர்கள் இருந்த காலகட்டத்தில் ஒரே படத்தில் பல கெட்டப்பில் நடிக்கும் நடிகர் என்ற இடத்தை பூர்த்தி செய்தது அஜித் தான். தீனா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் அஜித்தை தல என்று கொண்டாடி கொண்டு இருக்கும் போது, அடுத்த என்ன படம் என்று எதிர்பார்ப்பில் இருந்தனர்.

-விளம்பரம்-

அஜித் அடுத்த படத்தில் என்ன கெட்டப்பில் நடிக்க போகிறார் என்று எதிர்பரப்பில் இருந்த ரசிகர்களுக்கு 9 கெட்டப்பில் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த படம் தான் சிட்டிசன். இந்த படம் முதலில் கமலுக்கு தான் எழுதப்பட்டது என்று ஒரு பேச்சு அப்போது நிலவியது. சமூக வலைத்தளங்கள் பெரிதாக இல்லாத காலத்தில் இந்த படத்தின் ட்ரைலர் டிவியில் ஒளிபரப்பான போது பல கெட்டப்பில் தோன்றிய அஜித்தை கண்டு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரத்தது.

- Advertisement -

இந்த படத்தை இயக்கிய சரவண சுப்பையாவிற்கு இது தான் முதல் படம். முதல் படத்திலேயே அரசியல் மற்றும் ஊழல் சார்ந்த கதையை தைரியமாக எடுத்தார். அஜித்தும் இந்த கதையில் சற்றும் தலையிடாமல் முழு மனதுடன் நடித்தார். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் ஒவ்வொரு கெட்டப்பிற்க்கும் அஜித் பல மணி நேரம் மேக்கப் போட்டு அர்ப்பணிப்புடன் நடித்தார். மேலும், இந்த படத்தின் வசனங்களும் புரட்சிமிக்க வசனங்களாக இருந்தது.

அதிலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நிகழும் டுவிஸ்ட் அதுவரை தமிழ் சினிமாவில் கண்டிராத காட்சி அமைப்பும், திருப்புங்களும் அமைந்திருந்தது ரசிகர்களுக்கு புதுமையான விஷயமாக சர்ப்ரைஸ் அளித்தது என்றே உறுதியாக கூறலாம். பிளாஸ் பேக் காட்சியில் வரும் அஜித்தின் நடிப்பை கண்டு பலரும் அசந்து போனார்கள். இந்த படத்தில் தான் அஜித் முதன் முறையாக வயதான தோற்றத்தில் நடித்தார்.

-விளம்பரம்-

தீனா படத்தின் மாபெரும் வெற்றியால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருந்து அதனை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு போது அஜித்தின் பலவிதமான கெட்ட போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த அஜித் ரசிகர்கள் ரஜினிக்கு பாட்ஷா, கமலுக்கு சகலகலா வல்லவன் அஜித்துக்கு சிட்டிசன் என அஜித்தின் ஒவ்வொரு லுக்கிலும் போஸ்டரை ஒட்டி படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்தனர்.

இந்த படத்தில் பாண்டியன் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது ஜெமினி கணேசன் தான். அதே போல மீனா கதாபாத்திரத்தில் நடிக்க சேது படத்தில் நடித்த அபிதா தான் முதலில் தேர்வாகி இருந்தார். ஆனால், சில பல காரணங்களால் இந்த படத்தின் வாய்ப்பை அவரே தவறவிட்டுள்ளார். இப்படி பல விஷயங்களை கடந்து 8 கோடி பட்ஜட்டில் உருவான இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று 150 நாட்களுக்கு மேல் ஓடியது.

இந்த படத்தின் போது அஜித்துக்கு இருந்த ரசிகர் பட்டாளம் பற்றி ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ராஜாஜி மஹாலில் எடுக்கப்பட்டது. அப்போது அஜித்தை காண மட்டும் 5000த்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடி இருந்தனர். அந்த கூட்டத்தை அப்படியே படத்தில் பயன்படுத்திக்கொண்டார் இயக்குனர். சிட்டிசன் படத்தை தற்போதுள்ள இளசுகள் பார்த்தால் கலாய்க்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், 90ஸ் கிட்ஸ் மட்டுமே தெரியும் இந்த படம் எவ்வளவு பெரிய மாஸ் படம் என்று.

Advertisement