#25YearsOfNerukkuNer – பைக் ஓட்டும் காட்சியில் ஏற்பட்ட தவற, எடிட் செய்யாமல் போட்ட வசந்த் – கமல் படத்தை சுட்டிகாட்டி அவர் சொன்ன காரணம்.

0
1028
nerukkuner
- Advertisement -

நான் எட்டாவது படிக்கும் போதே பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பு எல்லாம் சிவகுமாரின் மகன் என்பதற்காக அந்த வாய்ப்பு. அதனால் அந்தப் படங்களில் நடிக்க எனக்கு அப்போது விருப்பமில்லை. அதன் பின்னர் நான் படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று விட்டேன். இதை சொன்னால் நம்ப கூட மாட்டார்கள், ஒரு கட்டத்தில் என்னுடைய குடும்பத்தில் ஒரு 25 ஆயிரம் கடனை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது நான்தான் மூத்த மகன் என்ற பொறுப்பில் இருந்ததால் அந்த கடனை அடைக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.

-விளம்பரம்-

அதனால் சினிமாவில் நடிக்கலாம் என்று முடிவு செய்தேன். அப்போது வேலைக்கு தினமும் ஒரு 80 கிலோமீட்டர் பயணம் செய்து வருவேன். இதனால் என்னுடைய முகமெல்லாம் அங்கங்கே கருப்பாக இருக்கும். நான் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று சொன்னபோது நீ எல்லாம் நடிக்க போறியா டா என்று என்னுடைய நண்பர்கள் சிலரை கேலி செய்தார்கள். ஆனால், என்னுடைய பழக்கம் என்னவென்றால் ஒரு விஷயத்தை முடிக்க முடியாது என்று சொன்னால் அதை நான் முடித்து காட்டுவேன் என்று அதை நான் செய்வேன்.

- Advertisement -

நேருக்கு நேர் படத்தில் சூர்யாவின் சம்பளம் :

வீட்டிலும் அப்படித்தான் ஏதாவது என்னிடம் உன்னால் முடியாது என்று சொன்னால் அதை நான் எப்படியாவது செய்து காட்டி விடுவேன்.அப்படித்தான் நான் நடிகன் ஆனதும். முதன்முதலில் நான் சினிமாவில் பணத்திற்காக தான் நடிக்க வந்தேன். என்னுடைய முதல் படமான நேருக்கு நேர் படத்தில் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தது. அதை அப்படியே எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்து விட்டேன்.

சரவணன் To சூர்யா :

நான் நடிகனாக மாறுவேன் என்றெல்லாம் நினைக்கவில்லை. எனக்கான ஒரு திருப்புமுனை ஏற்பட்டது அதை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன். நான் இப்போதும் அதைத்தான் சொல்கிறேன் உங்களுக்கு ஏதாவது ஒரு வாய்ப்பு வந்தால் அதை உதாசீனப்படுத்தாமல் பயன்படுத்திப்பாருங்கள். அதை அப்படியே விட்டு விடாதீர்கள். நான் நேருக்குநேர் படத்திற்கு பின்னர் சரவணன் என்ற பெயரில் இருந்து சூர்யாவாக மாறி அப்படியே படிப்படியாக ஒரு நடிகனாக மாறிவிட்டேன்.

-விளம்பரம்-

25 ஆண்டுகள் நிறைவு :

கடந்த 2020 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படம் குறித்து சூர்யா அளித்த பேட்டி இது. அந்த வகையில் இன்று நேருக்கு நேர் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு செய்து இருக்கிறது. வசந்த் இயக்கத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் விஜய் சூர்யா சிம்ரன் கௌசல்யா ரகுவரன் என்று பலர் நடித்து இருந்தார்கள் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது அல்டிமேட் ஸ்டார் அஜித் தான்.

பைக் ஓட்ட தடுமாறிய சூர்யா :

ஆனால் ஒரு சில பிரச்சனை காரணமாக இந்த படத்தில் இருந்து அஜித் விலகி விட்டார் இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு ஆட்சியில் சூர்யா பைக் ஓட்டும் போது நிஜமாகவே பைக்கில் இருந்து விழுந்து விபத்து ஏற்பட்டு இருக்கிறது. பொதுவாக இவ்வாறு ஷூட்டிங்கின் போது ஏற்படும் தவறுகளை படத்தின் எடிட்டிங்கில் நீக்கி விடுவார்கள். ஆனால், இந்த படத்தில் சூர்யா மற்றும் விஜய் பைக்கில் இருந்து விழும் காட்சி அப்படியே படத்தில் இடம்பெற்று இருக்கும். மேலும் இந்த காட்சியில் சூர்யா பல இடங்களில் பைக் ஓட்டவே தடுமாறி இருப்பார்.

கமல் படத்தை உதாரணம் சொன்ன வசந்த் :

ஒருவேளை இந்த இடத்தில் அஜித் நடித்திருந்தால் இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்து இருக்குமா என்பது சந்தேகம் தான். அதற்கு காரணம் அஜித் எந்த அளவிற்கு பைக் ஓட்டுவார் என்பது நாம் அனைவரும் அறிந்து ஒன்றுதான்.இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் வசந்திடம் இந்த பைக் விபத்து வைத்து கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர் ‘ஏக் துஜே கேலியே படத்தில் ஒரு பாடலில் கமலும் இப்படி விழுந்து இருப்பார். ஆனால், இப்போ பார்த்தாலும் அந்த காட்சி இருக்கும். அதே போல தான் இந்த காட்சியில் ஒரு பரபரப்பில் தான் இருப்பார்கள் அதனால் அதை அப்படியே விட்டுவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement