TTF உனக்கு வேனும்டானு கைதிங்க எல்லாம் சொன்னாங்க, அதே போல செந்தில் பாலாஜி உள்ள – சிறை அனுபவம் பகிர்ந்த ரவீந்தர்.

0
1497
Ravindar
- Advertisement -

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மக்கள் அறிந்த பிரபலங்களின் கைது பேசுபொருளாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி முதல் சமீபத்தில் கைதான ரவீந்தர், TTF ஆகிய அனைவரும் புழல் சிறையில் தான் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் புழல் சிறையில் இருந்து ஜமீனில் வெளியில் வந்த ரவீந்தர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் சிறையில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து அவர் சொன்ன போது ‘என்னுடைய உடம்பு மற்றவர்கள் உடம்பு போல ஈடு கொடுக்காது. எவ்வளவோ சொல்லியும் என்னை கைது செய்துவிட்டார்கள்.

-விளம்பரம்-

- Advertisement -

எனக்கு உள்ளே போனதும் வெற்றிமாறன் படம் தான் ஞாபகத்திற்கு வந்தது. கீழ உட்கார்ந்தா எழுந்திருக்க முடியாது. அதுக்கு 2, 3 பேர் உதவி வேணும். ஒவ்வொரு முறையும் அடுத்தவங்களை தொந்தரவு பண்ணக்கூடாதுனு நானே செவுத்தை பிடிச்சு தவழ்ந்து தவழ்ந்து தான் போனேன். சிறையில் முட்டி போட்டு முட்டி போட்டே என் முட்டியே கொளஞ்சி போச்சு.இப்படி ஒரு நிலையில் அதே புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் TTF வாசன் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் ‘ என் தலைவன் ttf வாசன் வந்ததும் ஜெயிலே அப்படியே கதறி விட்டது. எனக்கும் குருநாதா எங்கேயும் வந்து விட்ட என்று தோன்றியது. அவரை தனி செல்லில் வைத்திருந்தார்கள். ஆனால், அங்கேயும் வழக்கம்போல காவலர்களை வா செல்லம் போ செல்லம் என்று பேசினார். அங்கு இருந்த காவலர்கள் அடிங்க யாருடா செல்லம் என்று சொன்னார்கள். ttf பைக்கை நீதிபதி எரிக்க சொல்லிவிட்டார் என்று கேள்விப்பட்டதும் உள்ளே இருந்தவர்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.

-விளம்பரம்-

மேலும் அங்கு இருந்த கைதிகள் அனைவருமே உனக்கு வேண்டும் சார் என்றார்கள். அவர் மிகவும் சின்னப் பையன் இருப்பினும் தன்னை இந்த உலகம் சாதனையாளர்கள் பட்டியலில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார் அதனால் அவர் முட்டாள்தனமாக செய்யும் விஷயங்களுக்கு அவரது காதில் கேட்ட மாட்டேங்குது அவருக்கு கண்டிப்பாக ஆலோசனை தேவை. அவர் ஏதோ marvel படங்களில் வரும் கதாபாத்திரம் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஆனால், அங்கே ஊரப்போட்டு அடிப்பார்கள் என்பதும் அண்ணன் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அங்கே வெளுத்து விடுவார்கள் அதை சாரும் பார்த்தார். அதேபோல அங்கு யாருக்கும் சிறப்பு வசதிகள் என்பது கொடுக்கப்படுவது கிடையாது. நானே என்னால் முடியவில்லை ஒரு மெத்தை மட்டும் கொடுங்கள் என்று குட்டிக்கரணம் போட்டு பார்த்துவிட்டேன். ஒன்னும் நடக்கல.

ஆனால் அதற்குள்ளே செந்தில் பாலாஜிக்கு ஏசி இருக்கிறது முந்திரி பக்கோடா போகிறது என்று கிளப்பி விட்டார்கள். அவருக்கு புஹாரில இருந்து பிரியாணி வருது, அது வருது இது வருதுனு வெளில பேசிக்கிறாங்க. ஆனா உள்ள அவர் ரொம்ப எளிமையான வாழ்க்கை வாழ்கிறார். ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு தான் இருக்கார். ஜெயில்ல மத்தவங்க என்ன சாப்பிடுறாங்களோ அதை தான் அவரும் சாப்பிடுகிறார். அதுவும் உப்பு சப்பு இல்லாம தான் சாப்பிடுகிறார் என்று கூறியுள்ளார்.

Advertisement