கோட்டை படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்கள் காலம் கடந்து வந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று இருக்கிறது. அந்த வகையில் உள்ள படம் தான் அஜித்தின் காதல் கோட்டை படம்..இந்த படத்தில் அஜித் குமார், தேவயானி, ஹீரா ராசகோபால் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இந்த படத்தை சிவசக்தி பாண்டியன் அவர்கள் தயாரித்து இருந்தார். இன்றும் கூட ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் படமாக உள்ளது. பல்வேரு காதல் கதைகள் படமாக வந்த நிலையில் லெட்டர் மூலம் காதலிக்கும் ஜோடிகளின் ஒரு வித்தியாசமான கதையாக இந்த படம் அமைந்து இருந்தது.
26 ஆண்டுகள் நிறைவு :
இந்த படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியப்படமாக அமைந்து இருந்தது. இந்த படம் வெளியாகி 27ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பலரும் #27YearsOfkadahalkottai என்ற ஹேஷ் டேக்கை போட்டு இந்த படம் குறித்த தகவலைகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தில் முதலில் நடித்த நடிகர் குறித்தும் இந்த படத்தின் உண்மையான கிளைமாக்ஸ் குறித்த தகவல்களை பாப்போம்.
முதலில் வைக்கப்பட்ட கிளைமாக்ஸ் :
இந்த படத்தின் கிளைமாக்ஸ் வரை ஹீரோ ஹீரோயின் இருவரும் தாங்கள் நேரில் சந்தித்தாலும் ஒருவருக்கு ஒருவர் யார் என்பதை படத்தின் கடைசி நிமிடத்தில் தான் கடுபிடிப்பது போல காண்பித்து இருப்பார் இயக்குனர். ஆனால், “காதல் கோட்டை” படத்தின் கிளைமாக்ஸ் வேற என்று இயக்குனர் கூறி இருந்தார். இதை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.இந்த படத்தின் கிளைமாக்ஸில் அஜித்தும், தேவயானியும் சேர்ந்து விடுவார்கள்.
Remembering The Masterpiece #KadhalKottai 💥 On this Day
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) July 12, 2023
Evergreen 💗 Surya – Kamali 💗 Character..
👉 Movie Won 3 National Awards.
👉 Silver Jubilee Movie.#27YearsOfKadhalKottai #AjithKumar pic.twitter.com/6X7PwIMky5
கிளைமாக்ஸை மாற்ற காரணம் :
ஆனால், படத்தின் உண்மையாக எழுதிய கதையில் அஜித்தும், தேவயானியும் கடைசி வரை சேரமாட்டார்கள். மேலும், இதற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு நெகட்டிவ் கிளைமாக்ஸ் எல்லாம் வேண்டாம், மாற்றிக் கொடுங்கள் என்று இயக்குனர் அகத்தியனிடம் கேட்டாராம்.அதனால் தான் கிளைமாக்ஸ் இருவரும் சேரும் படி வைத்தார்கள் என ஒரு பேட்டியில் இயக்குனர் அகத்தியன் கூறி இருந்தார்.
ஆனால், இருவரும் சேரும் படி வைத்தால் தான் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆட்சி. ஆனால்,இருவரும் பிரிந்து இருந்தால் படம் ஹிட்டா இருக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வி தான். அதே போல இந்த படத்தில் முதன் முதலில் அஜித்துக்கு முன் நடித்து இருந்தது சீரியல் நடிகர் கோலங்கள் சீரியலில் தேவயானி கணவராக நடித்த அபிஷேக் தான். நடிகர் அபிஷேக், கோலங்கள் சீரியலில் பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பரிட்சியமானார். ஆனால், அதற்கு முன்னாள் பல படங்களில் நடித்துள்ளார்
பாதி படத்தில் விலகிய சீரியல் நடிகர் :
அதுமட்டுமல்லாமல் இவர் தான் ‘காதல் கோட்டை’ படத்தில் முதன் முதலில் நடித்து வந்தாராம் . கிட்ட தட்ட பாதி படம் முடிந்த நிலையில் சில பல பிரச்சனைகளால் அபிஷேக், படத்தில் இருந்து விலகி விட்டாராம்.அதனால், இந்த படத்தை நடிகர் அஜித்தை வைத்து இயக்குனர் அகத்தியன் மீண்டும் புதிதாக எடுத்து வெளியிட, படம் ஏகோபித்த ஹிட் அடைந்தது. இந்த படத்தை பார்த்த நடிகர் அபிஷேக் , இப்படி ஒரு படத்தை மிஸ் செய்து விட்டோம் என்று நடு ரோட்டியில் கதறி அழுதாராம்.இந்த தகவலை அவரே ஒரு பேட்டியில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.