அமைதி கூட்டத்தில் கால் மேல் கால் போட்டாரா இமானுவேல் ? பா ரஞ்சித்திற்கு இந்த படம் பதில் சொல்லும் –

0
1510
Paranjith
- Advertisement -

முத்துராமலிங்க தேவரையும், இமானுவேல் சேகரனையும் ஒப்பிட்டு பல விதமான சர்ச்சைகள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. ஏற்கனவே மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவதில் பல வருடங்களாக பிரச்சனை நடந்து கொண்டுதான் இருக்கின்றது. பலரும் சமூக தலைவர்கள் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர், இமானுவேல் சேகர் பெயரை சூட்ட வேண்டும் என்று சர்ச்சை எழுந்தது.

-விளம்பரம்-

அதன் பின் இரு தரப்பு மத்தியிலும் விவாதங்கள் தொடங்கியதால் ஜாதி பெயரான முத்தரையர் என்று பன்னாட்டு விமான நிலையத்திற்கு வைத்து google மேப்பில் பதிவாகி இருந்தது. இருந்தாலும், இது குறித்து சோசியல் மீடியாவில் பயங்கர ப்ரச்சனை நிலவிக் கொண்டுதான் வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாக முத்துராமலிங்க தேவர், இமானுவேல் சேகரன் குறித்த கருத்துக்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சவுத்ரி தேவர் பேட்டி

பின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இருவருக்குமே வீரவணக்கம் செலுத்தி போஸ்டர் ஒட்டி இருக்கிறார். இதற்கு பலருமே, கொலைகாரனுக்கும், கொல்லப்பட்டவருக்கும் ஒரே தராசில் வைத்து பார்ப்பதா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இந்நிலையில் இது குறித்து சவுத்ரி தேவர் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், இமானுவேல் சேகரனையும், முத்துராமலிங்க தேவரையும் நிச்சயமாக ஒப்பிட முடியாது.

இருவரையும் ஒப்பிட்டுவதா ? :

அவர்கள் இருவரையும் ஒப்பிட்டு செய்தி வெளியீடுவது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை விமான நிலையத்திற்கு வைத்தால் அதேபோன்று இமானுவேல் சேகரின் பெயரையும் விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும் என்று பிரச்சனை செய்கிறார்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இல்லை என்றால் இன்றைக்கு நமக்கு சுதந்திரமே கிடைத்திருக்கிறது.

-விளம்பரம்-

தேவரை வாழ்நாள் முழுவதும் நேருவும் வெள்ளைக்காரனும் கொடுமைப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். இமானுவேல் கொலை வழக்கு கூட அவர் மேல் போடப்பட்டது. அது அனைத்தும் பொய் என்று கூறப்பட்டது. இமானுவேல் சேகரனை அந்த சமுதாயத்தினர் தலைவராக உருவாக்கி விட்டனர். தாராளமாக அவரை அவர்கள் கொண்டாடட்டும். ஆனால், அவரை தேவருடன் ஒப்பிட கூடாது. அது சரியான விஷயம் கிடையாது.

தவறாக காண்பிக்கிறார் ரஞ்சித் :

அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. இமானுவேல் சேகரன் தேவர் முன்னால் கால் மீது கால் போட்டு உட்கார்ந்த காரணத்தினால் அவரை வெட்டி கொண்டதாக ரஞ்சித் திரைப்படத்தில் தவறாக காண்பித்திருக்கிறார். தேவர் மீது அவர்கள் தவறான ஒரு இமேஜை உருவாக்கினார்கள். ஒரு கலெட்க்டர் மீட்டிங்கில் அப்படி யாராலும் உட்கார முடியாது. கபாலி திரைப்படத்தில் அந்த காட்சி அளித்து தேவருக்கு எதிரான ஒரு குறியீடு. லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பா ரஞ்சித் இதை உறுதி செய்து இருந்தார் என்று பேசி இருக்கிறார்

Advertisement