இந்த 29 Camera App-களால் உங்கள் போனில் உள்ள போட்டோவை திருட முடியும்.! கொஞ்சம் உஷார்.!

0
1402
fake-app
- Advertisement -

நாம் பயன்படுத்தும் செல் போன் நமக்கு எந்த அளவிற்கு உபயோகமோ அதே அளவிற்கு நமக்கு ஆபத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. ஆனால், அவற்றிற்கு முக்கிய காரணமும் நாம் தான். ஆம், நாம் தேவை இல்லாமல் பிளே ஸ்டோரில் இருந்தோ வேறு இணையாளத்தில் இருந்தோ பதிவிறக்கம் செய்யும் அந்த செயலி தான் நமக்கு ஆபத்து.

-விளம்பரம்-

பெரும்பாலும் பிலே ஸ்டோரிலிருந்து நாம் பதிவிறக்கம் செய்யும் ஆப்கள் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தான் நாம் நினைக்கிறோம். ஆனால், அப்படிப்பட்ட பிலே ஸ்டாரிலும் சில நம்பகரமற்ற செயலிகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் கேமரா ஆப் என்ற பெயரில் பல்வேறு போலியான செயலிகள் பிலே ஸ்டாரில் உள்ளது.

- Advertisement -

கூகுள் நிறுவனம் 29 கேமரா பியூட்டி ஆப் செயலிகளை தனது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தற்பொழுது நீக்கியுள்ளது. இந்த 29 கேமரா பியூட்டி ஆப் செயலிகளில் ஆபாசமான உள்ளடக்கம் மற்றும் பயனரின் விபரங்களைத் திருட முயற்சி செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் நீங்கள் எந்த செயலிக்கு எல்லாம் உங்கள் camera permissision கொடுத்துள்ளீர்களோ அந்த செயலியின் தகவல்களை திருட முடியும். உதாரணமா நாம் பெரும்பாலும் facebook, instagram போன்ற செயலுக்கு நமது போனில் camera permission கொடுத்திருப்போம்.

-விளம்பரம்-

இது போன்ற போலியான beauty கேமரா செயலி மூலம் உங்கள் facebook, instagram போன்ற தகவல்களை திருட முடியும். அவ்வளவு ஏன் உங்கள் போனில் உள்ள எல்லா புகைப்படங்களையும் இந்த போலி கேமரா செயலி மூலமாக திருட முடியும். எனவே இதுபோன்ற beauty camera செயலிகளை பதிவிறக்கம் செய்யாமல் இருப்பது நல்லது.

Advertisement