கொரோனாவுக்காக என் பங்கு – உண்டியல் சேமிப்பை கொடுத்து அசத்திய யு.கே.ஜி சிறுவன்

0
677
lkg
- Advertisement -

கொரோனாவினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் யு.கே.ஜி படித்து கொண்டு இருக்கும் சிறுவன் ஒருவன் தான் சேமித்து வைத்த பணத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக கொடுத்து உள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு கே.என்.நகர் 2-வது வீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஜீவானந்தம் என்ற மூத்த மகன் உள்ளான். இவன் தற்போது யு.கே.ஜி படித்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
சிறுவன் ஜீவானந்தம்

- Advertisement -

நேற்று சந்திரசேகர் அவர்கள் தன் மகன் ஜீவானந்தத்துடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று இருந்தார். நாடு முழுவதும் கொரோனா பரவி இருக்கிற சூழலில் சந்திரசேகர் அவர்கள் தன் குழந்தையை கூட்டிக் கொண்டு கலெக்டர் ஆபீஸூக்கு சென்று இருந்தார். பின் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வருகைக்காக காத்திருந்தார்கள். உடனே அங்கிருந்த அதிகாரிகள் ஏன் பையனை அழைத்து கொண்டு வந்திருக்காய் என்று கேட்டார்கள்.

அதற்கு சந்திரசேகர் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி கொடுக்கலாம்னு தான் வந்தோம் என்று கூறினார். கலெக்டர் இடம் பணம் கொடுக்கக் முடியாது முதலமைச்சரின் நிவாரண நிதி வங்கிக் கணக்குக்கு டி.டி மூலமாகப் பணத்தைக் கட்டிவிட்டு வேண்டுமானால் கலெக்டரை வந்து பாருங்கள் என்று அங்கிருந்த அதிகாரிகள் கூறி உள்ளார்கள். பின் சந்திரசேகர் அவர்கள் தன் மகனுடன் வங்கிக்குச் சென்று உண்டியலை உடைத்து அதிலிருந்து 3,798 ரூபாயை எடுத்து முதலமைச்சரின் வங்கிக் கணக்கில் நிதியாக கட்டியிருக்கின்றனர்.

-விளம்பரம்-

பிறகு பணத்தைக் கட்டிய ரசீதை எடுத்து கொண்டு சந்திரசேகர் கலெக்டரை சந்திக்கப் போனார். ஆனால், கலெக்டர் மீட்டிங்கில் உள்ளார் என்று அவரை சந்திக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டார்கள். கலெக்டரைச் சந்திக்க முடியாமல் வருத்தத்தோடு சந்திரசேகர் மற்றும் அவரது மகன் ஜீவானந்தமும் வீடு திரும்பியிருக்கின்றனர். இதுகுறித்து சந்திரசேகர் இடம் கேட்டபோது அவர் கூறியது, சேமிப்பு என்பது வாழ்க்கையில் ரொம்ப முக்கியம் ஆன விஷயம். சேமிப்பதை பற்றி நான் என் பிள்ளைகள் இடம் சொல்லிக் கொண்டே இருப்பேன்.

அதைப் போலவே என் பிள்ளைகளும் பிறந்தநாள், விஷேச நாள்களில் நான் கொடுக்கிற பணத்தை செலவு பண்ணாமல் உண்டியலில் போட்டு சேமித்து வைத்து வந்தார்கள். என் முத்த மகன் ஜீவானந்தமும் உண்டியலில் பணத்தை சேமித்து வைத்து வந்தான். நாடு முழுவதும் பரவி உயிரை கொன்று இருக்கும் கொரோனாவுக்காக எல்லாரும் நிதி கொடுத்து இருப்பதை டிவியில் என் மகன் பார்த்து உள்ளான். பின் என் பையன் என்னிடம் , ‘அப்பா நாமளும் பணம் கொடுக்கலாமா?? நான் தான் என் உண்டியலில் பணம் சேர்த்து வச்சிருக்கேனே’ன்னு சொன்னான்.

கொரோனாவுக்காக என் பங்கு ரூ.3,798 ...

இந்த வயதில் நம்ம பையனுக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்குதே என்று எனக்கு பெருமையாக இருந்தது. பின் நான் அவனிடம் சரிப்பா உண்டியலை கொடு நான் போய் கலெக்டர் ஆபீஸ்ஸில் நிதி கொடுத்துட்டு வருகிறேன் என்று சொன்னேன். அதற்கு அவன் நான் சேர்த்து வைத்த பணத்தை என் கையாலத்தான் கொடுப்பேன் என்று கூறி அவனும் என் கூட வந்து கொரோனாவுக்கு நிதி கொடுத்தான். ஆனால், கலெக்டரை சந்திக்கலாம் என்று நினைத்தோம். அவர் மீட்டிங்கில் இருந்ததால் பார்க்க முடியவில்லை என்று கூறினார்.

நாளுக்கு நாள் இந்தியாவில் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனாவினால் 3691 பேர் பாதிக்கப்பட்டும், 99 பேர் பலியாகியும் உள்ளனர். அதிலும் தமிழகத்தில் 485 பாதிக்கப்பட்டும், 3 பேர் உயிர் இழந்தும் உள்ளனர். கொரோனா பரவலை மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சூழலில் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

Advertisement