என் கணவருக்கு எதாவது ஆச்சுன்னா அந்த ரெண்டு பேர் தான் காரணம். நடிகை வினோதினி எச்சரிக்கை.

0
41663
Vinodhini
- Advertisement -

நடிகை வினோதினியை ஞாபகம் இருக்குதா??? தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டங்களில் வெளியான படங்களில் கதாநாயகியாக நடித்தவர். பின் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றவுடன் சின்னத்திரையை நோக்கி பயணம் செய்தார். நடிகை வினோதினி பல சீரியல்களில் நடித்துள்ளார். பின்னர் வெங்கட் ஶ்ரீதர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பிறகு கொஞ்சகாலம் நடிப்பதில் இருந்து விலகியிருந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவரின் பிசினஸ் சூப்பராகப் போய்க்கொண்டு இருப்பதால் இவருக்கு நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. இதனால் பொறுப்பான குடும்பத் தலைவியாக தன்னுடைய பணியை செய்து கொண்டு வந்தார். இருந்தாலும் இவருக்கு சினிமா, சீரியலில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால், குழந்தைகள் வளர்ந்த பின்னால் நடித்து கொள்ளலாம் என்று நினைத்து வேணாம் என்று சொல்லிவிட்டார்.

-விளம்பரம்-
வினோதினி

- Advertisement -

பிறகு 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிப்பை விட்டு விலகி இருந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அக்னி நட்சத்திரம்’ சீரியலில் நடிக்க தொடங்கினார். என்ன என்று தெரியவில்லை இரண்டு மாதத்திலேயே இந்த சீரியலில் இருந்து உடனடியாக வெளியேறி விட்டார். இவருடைய கணவருக்கு விபத்து ஒன்று ஏற்பட்டு உள்ளது. அந்த விபத்தினால் இவருடைய கணவர் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வீல் சேரில் உட்கார நிலைக்கு தள்ளிவிடபட்டார். இதன் காரணமாக தான் இவர் சீரியலில் நடிக்க முடியாது என்று முடிவு செய்தார் என்று தெரிய வந்து உள்ளது. இது குறித்து அவர் பல விஷயங்களை பேசியுள்ளார், நாங்கள் எந்த தவறும் செய்யாமல் இருந்தும் எங்களுக்கு இவ்வளவு பெரிய கொடுமை நடந்துள்ளது. ஒரு நாள் வண்டியில் நாங்கள் சென்று கொண்டிருக்கும் போது சில பசங்களால் உண்டானது தான் இந்த விபத்து.

அந்த பசங்க அபராதம் கட்டி விட்டு போயிட்டாங்க. ஆனால், அந்த விபத்தில் சிக்கிய என் கணவர் 3 மாசம் ஐசியூவில் இருந்து மீண்டு வருவாரா? என மரண வலியில் நின்றிருந்தேன். மருத்துவச் செலவு, பிசினஸ் பாதிப்பு என சில மாதங்களாகவே என்னுடைய வாழ்க்கை ரொம்ப கஷ்டமாக இருந்தது. என் கணவரால் நடக்க முடியாமல் போனது. அவர் வண்டி ஓட்டும் போது மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் வருவார்கள் நாம் தான் கவனமாக ஓட்ட வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார். அப்படிப்பட்டவருக்கு தான் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து பிசினஸில் சில கோடிகளை ஏமாந்த மன அழுத்தத்தினால் தான் ஏற்பட்டது. இந்த பிசினஸ் பிரச்சனை எங்களுக்கு ஐந்தாறு வருடங்களாக இருந்தது. சஞ்சீவ், விக்ரம் என்ற அண்ணன் தம்பிங்க ரெண்டு பேரும் எங்களுடைய வீட்டை புதிதாக கட்டி தருகிறோம் என்று என் கணவர் கிட்ட அக்ரிமென்ட் போட்டு சில கோடி பணத்தை வாங்கினார்கள்.

-விளம்பரம்-

அந்த வீட்டு பத்திரம் தற்போது வங்கியில் இருக்கிறது. பணத்தை வாங்கிட்டு போனவர்கள் தான் அந்த வேலையையும் செய்யவில்லை, பணத்தையும் திருப்பிக் கொடுக்க வில்லை. அவர்களிடம் பணத்தை கேட்டபோது தர முடியாது என்று மறுத்து விட்டார்கள். இது தொடர்பாக நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக தான் வந்தது. ஆனால், அதற்கு பிறகும் அவர்கள் மேல் கோர்ட்டில் முறையீடு போகிறோம் என்று கூறினார்கள். இந்த பிரச்சனைக்கு நடுவில் தான் இந்த விபத்து எங்களுக்கு நடந்தது.

வினோதினி

இப்படி தொடர்ந்து நடக்கும் பிரச்சனைக்கு எல்லாம் அவர்கள் இருவர் தான் காரணம். நாங்கள் நிறைய மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறோம். இந்த நிலைமைக்கு அவர்களை கண்டிப்பாக தண்டிக்கணும் என்று கூறினார். இதுகுறித்து சஞ்சீவ்,விக்ரமிடம் கேட்டபோது அவர்கள் கூறியது, எங்க கம்பெனி பெயரில் தான் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. கம்பெனிக்கு நாலைந்து டைரக்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரிடமும் இந்த விஷயத்தைப் பற்றி கேட்காமல் ஏன் எங்களிடம் இதைக் கேட்கிறீர்கள் என்று அவர்கள் நாசுக்காக மறுத்து விட்டு சென்றார்கள்.

Advertisement