10 கிலோ எடை குறைப்பு, எந்த சேனல் என்ற பேச்சு வார்த்தை – மீண்டும் வருமா சக்தி மான் ?

0
2245
Sakthiman
- Advertisement -

ஒட்டுமொத்த உலகையும் அச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது இந்த கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். வீட்டில் இருப்பதால் போர் அடிக்காமல் இருப்பதற்காக ஒவ்வொரு சேனலும் சீரியல்,நிகழ்ச்சிகள் என மீண்டும் தூசு தட்டி மறு ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். ராமாயணம், மகாபாரதம் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று சொன்னவுடன் மக்கள் அனைவரும் குஷியாகி விட்டார்கள்.

-விளம்பரம்-
சக்திமான் முகேஷ் கன்னா

- Advertisement -

ஆனால், 90ஸ் காலகட்டங்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாக திகழ்ந்தது சக்திமான் தொடர் மீண்டும் ஒளிபரப்பாக போகிறது என்று அறிவித்தவுடன் தற்போது மீசை வைத்துள்ள 90ஸ் கிட்ஸ் அனைவரின் முகத்திலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி தான் போங்க. தற்போது இருக்கும் 2k கிட்ஸ்களுக்கு மார்வெல், டிசி என எத்தனையோ சூப்பர் ஹீரோ தற்போது இருந்தாலும் இந்தியாவில் எல்லாவற்றுக்கும் முன்னோடியே இந்த ‘சக்திமான்’தான்.

இதையும் பாருங்க : வீட்ல லவ் பண்ணுங்க, பேபி பண்ணாதீங்க. புலம்பும் டாக்டர். இவங்க இந்த பாடகர் தம்பதிகளோட மகள் தான்.

இந்த சக்தி மான் தொடரை வைத்து 90 ஸ் கிட்ஸ்களைடைய பல்வேறு நிறுவனங்களும் வியாபாரம் செய்துள்ளது. சக்தி மான் ஸ்டிக்கர்களை வாங்க பல்வேறு பொருட்களை வாங்கிய 90ஸ் கிட்ஸ்கள் தான் அதிகம். மேலும், வீட்டின் கண்ணாடி, பீரோ, ரப் நோட் என்று சக்தி மான் ஸ்டிக்கர் இல்லாத ஒரு 90ஸ் கிட்ஸ்களை கூட பார்க்காமல் இருக்க முடியாது. இந்த நிலையில் சக்தி மான் ஹீரோ முகேஷ் கண்ணா இந்த தொடரின் இரண்டாம் பாகம் குறித்து அளித்த பேட்டியின் சுருக்கத்தை காண்போம்.

-விளம்பரம்-
சக்திமான்

அந்த பேட்டியில் பேசி இருந்த அவர், மஹாபாரதம் நாடகம் மூலம் தான் எனக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. அதன் பின்னர் சக்தி மான் வாய்ப்பு கிடைத்தது. நான் வெளியில் எங்கே போனாலும் சிறு வயதுக் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை சக்திமான்னுதான் கூப்பிடுவாங்க. அந்தக் காலகட்டத்தில் எனக்கு வந்த பட வாய்ப்புகள் எல்லாத்தையுமே ‘சக்திமான்’ எனும் சூப்பர்ஹீரோ பாத்திரத்துக்கு சிக்கல் வருமேங்கிற ஒரே காரணத்தால் ஒதுக்கிட்டேன்.

சில மாதங்களுக்கு முன்பு அதற்கான பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டிருந்தது. எந்த சேனல்ல போடலாம்னு பேச்சு வார்த்தைகள் போயிட்டிருந்தன. இன்னொரு பக்கம் அந்த கேரக்டருக்காக 10 கிலோ எடையைக் குறைக்கணும். போக, அந்த ரோலை என்னைத் தவிர வேற யாராலேயும் பண்ண முடியுமானு எண்ணம் வர ஆரம்பிச்சது. டிரெண்ட் மாதிரியான சில காரணங்களால அந்தப் பிளானும் டிராப் ஆகிடுச்சு. வாய்ப்பு கிடைச்சா சக்திமான் கண்டிப்பா ரீ-என்ட்ரி கொடுப்பான்.

மேலும்ம் நடிகர் முகேஷ் கண்ணா Child Film Society என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இது குறித்து பேசியுள்ள அவர்,  ‘சக்திமான்’ சீரியல் பண்ணிக்கிட்டு இருந்த காலத்தில் குழந்தைகள் என்னை சூப்பர் ஹீரோவாகப் பார்த்தது எனக்கு ரொம்ப பிடிச்சதுனாலதான் இந்த அமைப்பில் இறங்கலாம்னு முடிவு பண்ணினேன். சக்திமானா இருந்த ஒரே காரணத்தாலதான் குழந்தைகளுக்காக அதைப் பண்ணேன். உள்ளே போனதுக்கு அப்புறமாதான் தெரிஞ்சது அப்போ இருந்த குழந்தைகளுக்கும் இப்போ இருக்கிற குழந்தைகளுக்கும் டெக்னாலஜி வியத்தில் நிறைய வித்தியாசம் இருக்குங்கிறது என்று புரிந்து கொண்டேன்.

Advertisement