வீட்ல லவ் பண்ணுங்க, பேபி பண்ணாதீங்க. புலம்பும் டாக்டர். இவங்க இந்த பாடகர் தம்பதிகளோட மகள் தான்.

0
24891
pallavi
- Advertisement -

உலக நாட்டையே தற்போது பேரழிவிற்கு உள்ளாகியுள்ள கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகள்,மளிகைக்கடை, போக்குவரத்துகள்,பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. கொரோனவினால் தற்போது நாட்டில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் உணவுக்காக கஷ்டப்பட்டு வருகின்றனர். இருப்பினும் இந்த ஊரடங்கு உத்தரவால் வேறு விதமான ஒரு வியப்பான விஷயமும் நடந்தேறி வருகிறது.

- Advertisement -

அதாவது இந்த கொரோனா வைரஸ்சால் ஆணுறையின் விற்பனை அதிகரித்து உள்ளது என்று ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், தற்போது பெண்கள் கர்பமாவதும் அதிகரித்துள்ளதாக பிரபல பின்னணி பாடகரான புஸ்பவனம் குப்புசாமியன் மகள் பல்லவி அகர்வால் தனது முகநூல் பக்கத்தில் வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.

இந்திய நாட்டுப்புற பாடகர் மற்றும் திரைப் பட பின்னணிப் பாடகராக வலம் வருபவர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தன்னுடைய நாட்டுப்புற இசையின் மூலம் ஒட்டு மொத்த தமிழக மக்களின் மனதையும் கவர்ந்தவர். மேலும், இவர் நாட்டுப்புற பாடகியான அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நாட்டுப்புற பாடகர் தம்பதியருக்கு பல்லவி, மேகா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். இதில், மூத்த மகள் பல்லவி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

-விளம்பரம்-
Dr-pallavi

தற்போது இவர் கொரோனா பாதிப்பால் சாதாரண உடல் நல குறைபாடுகளால் மருத்துவர்கள் இல்லாமல் மக்கள் அவதிப்படாமல் இருக்கு மருத்துவர்கள் சிலருடன் இணைந்து ஜுரம், காய்ச்சல் மற்றும் வேறு சில உடல் நல குறைவால் வரும் மக்களுக்கு மருத்துவரக்ளுடன் இணைந்து தனது சேவையை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் பணியாற்றி வரும் மருத்துவமனையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிகம் வருவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பல்லவி, வீட்டில் இரு பாதுகாப்பாக இரு அன்பை உருவாக்கு குழந்தை அல்ல நிறைய கர்ப்பிணிகள். என்னடா பண்றீங்க என்று பதிவிட்டுள்ளார் பல்லவி. இது ஒருபுறம் இருக்க கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல்லவியை யாரோ கடத்திவிட்டார்கள் என்று ஒரு வதந்தி பரவியது. ஆனால், தான் கடத்தபடவில்லை என்று வீடியோ வெளியிட்டிருந்தார் பல்லவி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement