விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ’96’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக ஆதித்யா பாஸ்கரும், சிறு வயது த்ரிஷாவாக கெளரி கிஷனும் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் ராம்-ஜானு ஜோடிதான் இணையத்தில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. அதில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷனின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டு வந்தது. குறிப்பாக திரிஷாவின் பள்ளி கதாபாத்திரத்தில் கௌரி கிருஷ்ணனும் நடித்து பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்தனர்.
பள்ளி பருவ திரிஷாவாக நடித்திருந்த கௌரிக்கு ரசிகர்களும் உருவாகியுள்ளனர். இப்படத்தில் இவரின் நடிப்பு பலரை கவனம் ஈர்த்ததால் அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்த்து வந்தனர் இருந்தது.
சன்னி வேயின் :
இந்நிலையில் ‘96’ திரைப்படத்தை தொடர்ந்து கௌரி அடுத்ததாக மலையாள திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
பிரின்ஸ் ஜாய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கௌரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடிக்கிறார்.‘அனுகிரஹித்தன் அந்தோனி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது.