96 படத்தின் வெளிவராத காட்சி..!பாடகி ஜானகி கூட நடித்துள்ளாரா..!

0
316
96

தமிழ் சினிமாவில் அணைத்து நடிகர்களின் ரசிகர்கர்களாலும் விரும்பப்படும் வேறு ஒரு நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். வித்யாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதியின் பெரும்பாலான படங்கள் வெற்றியின் லிஸ்டில் தான் சேர்க்கிறது.

அந்த வகையில் விஜய் சேதுபதி, த்ரிஷா முதல்முறையாக இணைந்து நடித்த படம் ’96. இந்தப் படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்க, `நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படம், சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

தீபாவளியன்று இந்தத் திரைப்படம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதன் பின்னரும் ’96 படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் இந்த படத்தில் இருந்து வெளிவராத காட்சிகளை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும்,அந்த காட்சியில் பிரபல பின்னணி பாடகியான ஜானகியும் நடித்திருபத்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.