என்னது வாக்களிக்க விஜய் வந்த காருக்கு இன்சூரன்ஸ் இல்லையா ? கடைசியா எப்ப கட்டிருகார் பாருங்க.

0
609
- Advertisement -

தமிழ் நடிகர்களில் தேர்தலின் போது எப்போதுமே ஜனநாயக கடமையை செய்வதில் அதிக ஆர்வத்துடன் இருப்பவர் நடிகர் விஜய். நீலாங்கரை வாக்கு சாவடியில் நடிகர் விஜய் காலை முதல் ஆளாக வாக்களித்த நிலையில் தற்போது விஜய்யின் வோட் தான் சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறார். சமூக மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வந்தனர் . விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட விஜய் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து அந்த 9 மாவட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர்.

-விளம்பரம்-

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இப்படி தீவிரமாக அனைத்துக் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து முடிந்து மக்கள் அனைவரும் இன்று ஒட்டு போட்டு முடித்து உள்ளார்கள். தீவிரமாக மக்களும் தங்களுடைய ஜனநாயக கடமையை செய்து உள்ளார்கள். அந்த வகையில் விஜய்யும் தன்னுடைய ஜனநாயக கடமையை செய்ய வாக்கு சாவடி நடக்கும் இடத்திற்கு சென்று இருக்கிறார். இன்று காலை நடிகர் விஜய் அவர்கள் சென்னை நீலாங்கரையில் அமைந்து உள்ள வாக்குச்சாவடிக்கு 7மணிக்கு சென்றிருக்கிறார்.

- Advertisement -

வாக்களித்த வந்த விஜய்:

விஜய் தனியாகவே வாக்குச்சாவடி அமைந்திருக்கும் இடத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு வாக்குச்சாவடியில் போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. விஜய் வந்த தருணத்தில் அங்கு 2 பேர் மட்டுமே அங்கு இருந்தார்கள். அப்போது அங்கிருந்த ஒரு மூதாட்டி ஒருவர் நடிகர் விஜய்யை பார்த்து வணக்கம் தெரிவித்தார். அதற்கு விஜய்யும் புன்னகைத்து அந்த மூதாட்டிக்கு வணக்கம் கூறினார். ஆனால், நடிகர் விஜய் வாக்குசாவடிகளில் வாக்களிக்க வந்தவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார் என்று வதந்திகளை பரப்பி இருக்கிறார்கள். பின் அது உண்மை இல்லை இல்லை, வதந்தி என்று வெளியானது.

சட்ட மன்ற தேர்தலில் வாக்களிக்க விஜய் வந்த வண்டி:

இப்படி ஒரு நிலையில் விஜய் யாருக்கு வாக்களித்தார் என்ற மிகப்பெரிய கேள்வி நிலவி வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தல் நடந்த போது நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார். பெட்ரோல் உயர் விலையை கண்டித்து தான் விஜய் சைக்கிளில் வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் வந்த சைக்கிளின் நிறம் சிகப்பு மற்றும் கருப்பு நிறத்தில் இருந்ததை கண்டு அவர் கண்டிப்பாக தி மு கவிற்கு தான் வாக்களித்தார் என்று பேச்சுக்கள் கிளம்பியது. ஆனால், இந்த முறை நடிகர் விஜய் சிகப்பு நிற காரில் வந்து வாக்களித்தார். அதோடு மட்டுமல்லாமல் அவர் வந்த கார் சிகப்பு மற்றும் அவர் அணிந்து இருந்த முகக்கவசம் கருப்பு என்பதால் அவர் இந்த முறையும் தி மு கவிற்கு தான் வாக்களித்து இருப்பார் என்று கிசுகிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

வாக்களிக்க விஜய் வந்த கார்:

அப்போது விஜய்யே அவரின் விஜய் மக்கள் இயக்கம் கட்சிக்கு வாக்களிக்கவில்லையா என்று கேள்வியும் எழுந்தது. ஆனால், உண்மையில் விஜய் வாக்கு செலுத்திய தொகுதியில் விஜய் மக்கள் இயக்கம் கட்சியினர் யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓட்டு போட விஜய் வந்த காரின் இன்சூரன்ஸ் காலாவதி ஆகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் ஓட்டு போடுவதற்காக சைக்கிளில் வந்து இருந்தார். ஆனால், இந்த முறை சிவப்பு நிற மாருதி காரில் விஜய் வாக்களிக்க சென்றிருக்கிறார். விஜய் வந்திருந்த சிவப்பு நிற மாருதி கார் இன்சூரன்ஸ் இல்லை என்ற தகவல் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.

காலாவதியான விஜய் கார் இன்சூரன்ஸ்:

மேலும், TN07CS7967 என்ற கார் ஜோசப் விஜய் என்ற பெயரில் உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதத்துடனே இந்த காரின் இன்சுரன்ஸ் முடிந்திருக்கிறது. இது வரை அதற்கு பிறகு இன்சுரன்ஸ் புதுப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்படி இன்சுரன்ஸ் செய்யாத காரை ஓட்டி செல்வது சாலை விதிமீறல் மட்டுமில்லாமல் அபராதத்துடன் கூடிய குற்றம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவவில் வைரலாகி வருகிறது. இது குறித்து விஜய் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement