தேசிய விருது பெற்ற ’ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு

0
701
komagan
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி ஒரு போறாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்களின் எதிர்பாராத இழப்பு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியது. சமீபத்தில் கூட பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் பாண்டு இன்று (மே 6) காலமாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் ஆட்டோகிரபாப் பட புகழ் பாடகர் கோமகன் கொரோனா தொற்றால் காலமாகியுள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு சேரன் இயக்கி, நடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் இடம்பெற்ற ’ஒவ்வொரு பூக்களுமே’ பாடலின் மூலம் உலகம் முழுக்க புகழ்பெற்றார் பாடகர் கோமகன்.  பரத்வாஜ் இசையில் இப்பாடலை எழுதிய பா.விஜய்க்கும், பாடகி சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்திருந்தது.

இதையும் பாருங்க : Breaking News : கொரோனாவால் பிரபல காமெடி நடிகர் பாண்டு காலமானார் – அவரது மனைவியின் நிலை.

- Advertisement -

 இப்பாடலில் நடித்ததோடு கடைசியில் ‘மனிதா உன் மனதை கீரி விதை போடு உரமாகும் ‘ என்று உணர்வுப்பூர்வமாகப் ஓரிரு வார்த்தைகள் பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் கோமகன். பல்வேறு மேடை பாடல்களை பாடி வந்த இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தவர் சேரன் தான். மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்திருந்தது.

Image

இவருக்கு ஐசிஎப்-ல் அரசு வேலையும் கிடைத்து இருந்தது. அதன்பின்னரும் சினிமாவில் இவர் ஒரு சில படங்களில் பணியாற்றி வந்தார். மேலும், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கொண்டு இசைக்குழு ஒன்றையும் நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கே அவருக்கு 12 நாட்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அதிகாலை 1 30 மணியளவில் அதிக மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்

-விளம்பரம்-
Advertisement