மெட்டி ஒளி சீரியல் நடிகையா இது.! உடல் எடை குறைந்து ஒல்லியாக மரியா நடிகை! புகைப்படம் உள்ளே!

0
7915
Uma
- Advertisement -

மெட்டி ஒலி’ சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்தவர், உமா மகேஸ்வரி. ‘ஒரு கதையின் கதை’, ‘மஞ்சள் மகிமை’ போன்ற சீரியல்களிலும், ‘ஈ பார்கவி நிலையம்’ என்கிற மலையாளப் படத்தின் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். 13 வருடங்கள் மீடியாவில் பயணித்தவரை, திருமணத்துக்குப் பின்னர் சீரியலில் பார்க்க முடியவில்லை. விஜய் டி.வி-யின் ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியில் வந்தார். தற்போது, என்ன செய்துகொண்டிருக்கிறார்? அவருடன் பேசும் முன்பு, குட்டி பயோ இதோ..

-விளம்பரம்-

uma

- Advertisement -

பெயர்: உமா மகேஸ்வரி
முதல் சீரியல்: காலேஜ் ரோடு
முதல் படம்: வெற்றிக்கொடிகட்டு
தற்போது: பிசினஸ்
எதிர்காலத் திட்டம்: நடிக்க வெயிட்டிங்!

நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். என் அப்பா அசிஸ்டன்ட் டைரக்டர். சின்னத்திரை நடிகை வனஜா, என் அக்கா. ஒருநாள் அக்காவின் சீரியல் ஷூட்டிங்குக்குப் போயிருந்தேன். அங்கே என்னைப் பார்த்துட்டு நடிக்கக் கூப்பிட்டாங்க. ‘உன்னால் பண்ணமுடியும்னு நம்பிக்கை இருந்தா செய்’னு அப்பா சொன்னார். விஜய் டி.வி-யின் ‘காலேஜ் ரோடு’ சீரியலில் நடிச்சேன். இப்படித்தான் என் மீடியா பயணம் ஆரம்பிச்சது. ‘காலேஜ் ரோடு’ சீரியல் பண்ணிட்டிருக்கும்போதே, ‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துச்சு. மனோரமா ஆச்சியுடன் நடிச்ச அந்த நாள்களை மறக்கமுடியாது. ஒருநாள் அவங்க, ‘உன் சீரியல் பார்த்தேன். அருமையா நடிச்சிருக்கே’னு மனம்விட்டுப் பாராட்டினாங்க. வானத்தில் மிதந்த நாள்கள் அவை. அதைத் தொடர்ந்து ‘அல்லி அர்ஜுனா’, ‘உன்னை நினைத்து’ போன்ற படங்களில் நடிச்சேன்.

-விளம்பரம்-

ஒரு கட்டத்தில் சீரியல், சினிமா என பிஸியா இருந்தேன். நான் நடிச்ச ‘மெட்டி ஒலி’ சீரியல் பெரிய ரீச் கொடுத்துச்சு. கடைசியா, ‘மஞ்சள் மகிமை’ என்ற சீரியலில் நடிச்சேன். அதுக்கப்புறம் திருமணமாச்சு. நடிப்புக்கு பிரேக் விடப்போறேன்னு நானா சொன்னதில்லை. ஆனால், என்ன காரணமோ எந்த வாய்ப்பும் வரலை. போன வருஷம் சின்னத்திரை எலெக்‌ஷனில் கலந்துகிட்டேன். அப்போ, பலரும் நான் திரும்ப வந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாங்க. திருமணம் ஆனதும் சீரியல் கரியர் ஏன் டவுண் ஆகுதுன்னே தெரியலைங்க’!

ன்னாடி, சீரியலில் ஒரு கதை எழுதும்போதே… இந்த ஆர்ட்டிஸ்ட்தான் இந்த ரோல் பண்ணுவாங்க என இருந்துச்சு. இப்போ அப்படியில்லை. கதை எழுதிட்டு கதாபாத்திரங்களை புதுசா தேர்ந்தெடுக்கிறாங்க. நான் யாரையும் தப்பு சொல்லலை. நான் நடிச்ச எல்லா கதாபாத்திரமுமே என்னைத் தேடிவந்த வாய்ப்புதான். இப்பவும் ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிச்சா சரியா இருக்கும்னு நினைச்சு வாய்ப்புக் கொடுத்தால், நிச்சயம் நடிக்கக் காத்திருக்கேன்.

Advertisement