விடாமுயற்சி ஷூட்டில் நடந்த விபத்து – புகைப்படத்தை பகிர்ந்து IPS அதிகாரி சொன்ன அறிவுரை

0
428
- Advertisement -

விடாமுயற்சி படப்பிடிப்பில் நடந்த விபத்தை குறிப்பிட்டு ஐபிஎஸ் அதிகாரி அறிவுரை கூறி இருக்கிறார். கோலிவுட்டில் 90 காலகட்டம் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் பின் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி வருகிறார்.

- Advertisement -

தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். ஏற்கனவே அஜித்- திரிஷா இருவரும் இணைந்து ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் விடாமுயற்சி படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

இவர்களுடன் இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இதற்கிடையில் விடாமுயற்சி கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் இறந்தார். இதனால் விடாமுயற்சி படகுழுவினருக்கு பேர் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. அவருடைய மறைவிற்கு பிறகு பட வேலைகள் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆரம்பித்து விட்டார்கள்.

-விளம்பரம்-

இந்த நிலையில் விடாமுயற்சி சூட்டிங் ஸ்பாட் வீடியோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், அஜித் அவர்கள் காரில் ஸ்டண்ட் செய்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு இருக்கிறது.இருந்தாலும், அஜித் பயப்படாமல் அருகில் இருந்த ஆராவிடம் ‘Are You Ok’ என்று கேட்டுள்ளார்.மேலும், இந்த விபத்தில் ஆண்டவன் புண்ணியத்தில் உயிர் பிழைத்ததாக ஆரவ் கூட பதிவிட்டு இருந்தார்.

இந்த விபத்தில் அஜித் மட்டும் தான் சீட் பெல்ட் அணிந்து இருந்தார். ஆனால், அவரது பக்கத்தில் அமர்ந்து இருந்த ஆரவ் சீட் பெல்ட் அணியவில்லை. இப்படி ஒரு நிலையில் அதனை குறிப்பிட்டு ips அதிகாரி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ‘வாகனத்தில் பயணிக்கும் பொழுது சீட் பெல்ட் அவசியம்’ என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பலவிதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement