விவேக்கின் 1 கோடி கனவில் இணைந்த விவேக்குடன் நடித்த நடிகை – (ஒரே படம் தான் அவர் கூட நடிச்சாரு).

0
23807
aathmika

சனங்களின் கலைஞனாக இருந்த சின்னக் கலைவானர விவேக் கடந்த மூன்று தினங்களுக்கு முன் (ஏப்ரல் 17) காலமான சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. விவேக்கின் உடல் விம்ருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது இதற்கு பலரும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். விவேக் இருந்த போது கிரீன் கலாம் மூலம் 1 கோடி மரங்களை நட வேண்டும் என்பதை ஒரு இலக்காக கொண்டுவந்தார். இதுவரை அவர் 30 லட்சத்துக்கும் மேலான மரங்களை நட்டு இருந்தார்.

இதையும் பாருங்க : என்ன அசிங்கம் ஆகிடும், தப்பாகிடும் பாத்துக்கோ – ஸ்டார் மியூசிக் பாபா பாஸ்கருக்கும் கனிக்கும் வெடித்த வாக்கு வாதம்.

- Advertisement -

விவேக் இறந்துவிட்டதால் அவரின் 1 கோடி மரக் கன்று கனவு நிறைவேறதா என்று பலர் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால், விவேக் இறந்த போது பலரும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மரக் கன்றுகளை நட்டனர். அதே போல பல பிரபலங்களும் மரக் கன்றுகளை நட்டு விவேக்கின் 1 கோடி மரக் கனவை நினைவாக்க உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் விவேக்குடன் ‘மீசைய முறுக்கு’ படத்தில் நடித்த ஆத்மீகாவும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.

தன்னுடைய வீட்டில் சில மரக் கன்றுகளை நட்டு அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஆத்மீகா,நடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement