சினிமா என் கையில் இருக்கு என சொன்ன யாரும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது’- ரெட் ஜெயிண்ட் நிறுவனத்துடனான பிரச்சனை குறித்து விஷால்.

0
276
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், எல்லாமே வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படம் பல சமூக கருத்துக்களை முன்வைத்து இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இறுதியாக மாமன்னன் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் இந்த படத்தோடு சினிமாவிற்கு முழுக்கு போட்டார் உதயநிதி. தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார். இந்த நிறுவனம் பிரபல நடிகர்களின் படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது.

- Advertisement -

அதுவும் தற்போது வரும் பெரும்பாலான நடிகர்களின் படங்களை சன் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜெயிண்ட் தான் வெளியிட்டு வருகிறது. இதனால் தமிழ் சினிமா தி,மு.க குடும்பத்திடம் மாட்டி இருப்பதாக சவுக்கு சங்கர் கூட கூறி இருந்தார். அதுமட்டுமில்லாமல் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை வாங்கி வெளியிட்டால் தான் தியேட்டர்கள் கிடைப்பது எளிது என நினைத்து சில நிறுவனங்கள் அவர்களை அணுகி படங்களை வெளியிடுகிறார்கள்.

ஆனால், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமோ முக்கியமான பிரபலங்களின் படங்கள், அதிலும் அதிக வசூலை தரும் என்ற நம்பிக்கை உள்ள சில முன்னணி நடிகர்களின் படங்களை மட்டுமே வாங்கி வெளியிடுகிறது. இப்படி ஒரு நிலையில் எனிமி படத்தின் போது ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திற்கும் தனக்கும் நேர்ந்த பிரச்சனை குறித்து ஓப்பனாக பேசி இருக்கிறார் விஷால். விஷால் நடிப்பில் விரைவில் ரத்னம் படம் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் அடிக்கடி பேட்டிகளை கொடுத்து வரும் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெயிண்ட் நிறுவனத்திற்கும் அவருக்கும் இருக்கும் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த விஷால் ‘ ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தில் இருக்கும் குறிப்பிட்ட நபருடன் எனக்கு பிரச்சனை இருக்கிறது. ஒரு படம் வந்து தள்ளிப்போக வேண்டும் என சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

வட்டிக்கு வாங்கி, வேர்வை சிந்தி, இரத்தம் சிந்தி ஒரு படம் எடுத்தால் ரிலீஸ் தேதியை தள்ளிப்போடுங்கள் என சொல்ல நீங்கள் யார் என புரியவில்லை.நீங்கள் தான் சினிமாவை குத்தகை எடுத்துள்ளீர்களா? என நான் ஒரு நபரிடம் கேட்டேன். அவரை, நான் தான் உதயநிதி ஸ்டாலினிடம் சேர்த்து விட்டேன். அவரே வந்து இந்த மாதிரி விஷயம் பண்ணும்போது ஜீரணிக்க முடியவில்லை.சினிமாவை யாரும் உரிமை கொள்ள முடியாது. சினிமா என் கையில் இருக்கு என சொன்ன யாரும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது’ என்று கூறியுள்ளார் விஷால்.

Advertisement