-விளம்பரம்-
Home விமர்சனம்

ராஜாவாக வந்தாரா சிம்பு.! வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் விமர்சனம்.!

0
2272
Vantha-Rajavathan-varuven

2016 ஆம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு 2 ‘ படத்தை தொடர்ந்து சுந்தர் சி, சிம்புவை வைத்து இயக்கியுள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன் ‘ படம் இன்று (பிப்ரவரி 1) வெளியாகியுள்ளது. இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை தற்போது காணலாம்.

-விளம்பரம்-

படம்:- வந்தா ராஜாவாதான் வருவேன்
இயக்குனர்:- சுந்தர் சி  
நடிகர்கள் : – சிம்பு,கேத்ரின், ரோபோ ஷங்கர், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், பிரபு,நாசர் மற்றும் பலர்   
தயாரிப்பு : –  லைகா தயாரிப்பு நிறுவனம்
இசையமைப்பளார் :- ஹிப் ஆஃப் ஆதி  
வெளியான தேதி : 01-02-2019

கதைக்களம்:

-விளம்பரம்-

படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல சிம்பு ஒரு பெரிய இடத்து மகனாக ராஜா போல வாழந்து வருகிறார். படத்தின் ஆரம்பத்தில் நாசர் தனது பேரன் சிம்புவிடம் ஒரு விடயத்தை கூறுகிறார். அது என்னவெனில் நாசரின் மகள் ரம்யா கிருஷ்ணன் வீட்டைவிட்டு ஓடிப்போய் பிரபுவை திருமணம் செய்துகொள்கிறார்.

இதையும் படியுங்க : ஜி வி பிரகாஷின் ‘சர்வம் தளமயம்’ படத்தின் முழு விமர்சனம்.

-விளம்பரம்-

இதனால் தனது மகளை பிறந்த துக்கத்தில் இருக்கிறார் நாசர். என்வே, தனது 80 வயதில் தனது குடும்பம் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று ஆசைபடுகிறார் நாசர். தனது தாத்தவின் ஆசையை நிறைவேற்ற தனது அத்தை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வேலைக்கரறாக சேர்கிறார் சிம்பு.

பின்னர் சிம்பு தனது அத்தை வீட்டில் வேலைக்கு சேர்ந்து என்ன செய்கிறார். இறுதியில் அவர்கள் குடும்பம் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பதை தனது ஸ்டைலில் கொடுக்க முயற்சி செய்துள்ளார் சுந்தர் சி.

ப்ளஸ் :

படத்தின் ப்ளஸ் யோகி பாபு மட்டும் தான் அவர் வரும் காட்சிகளில் மட்டும் தான் சிரிப்பு வருகிறது. அதே போல வழக்கம் போல கலர் புள் செட் மற்றும் ஒளிப்பதிவில் சுந்தர் சியின் டச் தெரிகிறது. படத்தின் பஞ்ச் வசனங்கள் ரசிகர்களுக்கு கொஞ்சம் பிடித்திருக்கிறது. படத்தின் கடைசி 10 நிமிடம் யோகிபாபு காமெடியில் அசத்தியுள்ளார்.

மைனஸ் :

படத்தின் நிறைகளை விட குறைகள் தான் அதிகம். படத்தின் தலைப்பை கண்டு சிம்பு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தார்கள். ஆனால், தெலுகு படத்தை தமிழில் பார்த்து போல தான் தெரிந்தது. யோகி பாபு காமெடி ஆறுதலாக இருந்தலும் படத்தில் சிம்புவிற்கு காமெடி சுத்தமாக ஈடுபடவில்லை.

விஜயின் மின்சார கண்ணா திரைப்படம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா. அந்த கதையை தெலுங்கில் ரீ-மேக் செய்து பின்னர் மீண்டும் தமிழில் ரீ-மேக் ஆகி வந்துள்ளது போல தான் இருக்கிறது இந்த படம்.

அதே போல பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கும் ஹீரோ கதாபாத்திரத்தை நாம் பல படங்களில் பார்த்துள்ளோம். சொல்லப்போனால் சுந்தர் சி இயக்கிய ஆம்பள படத்தின் அதே கதை தான் இதுவும். படத்தின் பெரும் பாலான காட்சிகள் எதை எங்கயோ பார்த்திருக்கிறோமே என்று எண்ணத்தை உருவாக்குகிறது. வழக்கம் போல கவர்ச்சிக்காக மட்டும் இரண்டு கதாநாயகிகள். ஹிப் ஹாப் தமிழா கொஞ்சமாவது புதிய ட்யூன்களை கொடுக்க முயற்சித்திருக்காமல். சிம்பு இன்னமும் நான் கெட்டவன், நல்லவன் என்று படத்தில் பேசி வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது.

இறுதி மதிப்பு :

பொதுவாக நிறைய நட்சத்திர பட்டாளங்களை வைத்து கமர்சியல் காமெடி படங்களை கொடுப்பதில் சுந்தர் சி மிகவும் கெட்டிக்காரர். இத்தனை பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்தும் சிம்புவால் ராஜாவாக வர முடியவில்லை என்பது தான் உண்மை. வீட்டில் சீரியல் பார்க்கும் பெண்களுக்கு வேண்டுமானால் இந்த படம் பிடிக்கலாம். ஆனால், கண்டிப்பாக நடுநிலை சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் பால் ஊத்திவிடும் என்பது தான் உண்மை. மொத்தத்தில் இந்த படத்திற்கு நமது Behindtalkies அளிக்கும் மதிப்பெண் 5/10 அதுவும் சுந்தர் சி மற்றும் சிம்பு, யோகி பாபுவிற்கு மட்டும் தான்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news