மீண்டும் ஒரு மின்சார கனவா ‘சர்வம் தளமயம்’ படத்தின் முழு விமர்சனம்.!

0
699
Sarvam-Thalamayam

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை தொடர்ந்து 19 வருடங்களுக்குப் பிறகு ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘சர்வம் தாளமயம்’ படத்தின் விமர்சனத்தை தற்போது காணலாம்.

படம்:- சர்வம் தளமயம்
இயக்குனர்:- ராஜிவ் மேனன்
நடிகர்கள் : – ஜி.வி.பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, திவ்யா தர்ஷினி, நெடுமுடி வேணு, வினீத் மற்றும் பலர்   
தயாரிப்பு : –  லதா மேனன் Mind Screen Film Studio
இசையமைப்பளார் :- ஏ ஆர் ரஹ்மான்
வெளியான தேதி : 01-02-2019

- Advertisement -

கதைக்களம்:

கர்நாடக இசை கருவியான மிருதங்கம் செய்பவராக வருகிறார் ஜான்சன் (குமரவேல்). இவரது மகன் பீட்டர் ஜான்சன்(ஜி.வி.பிரகாஷ்).  தீவிர விஜய் ரசிகராக இருந்து வருகிறார். இவர் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று தான் இவர்களது குடும்பத்தில் ஆசை படுகின்றனர். ஆனால், பீட்டரோ விஜய் படத்திற்காக அன்னதானம் செய்வது ரத்த தானம் செய்வது என்று சுற்றுவதால் படிப்பில் கவனம் செலுத்தாமல் விடுகிறார்.

ஒரு சமயம் விஜய் படத்திற்காக ரத்த தானம் செய்யும் போது நர்சாக வரும் கதாநாயகி மீது காதல் கொள்கிறார். இப்படியே படம் கொஞ்சம் நகர படிப்பை கோட்டை விட்டு தன்னுடைய அப்பா செய்யும் குலத்தொழிலான தாளக்கருவி செய்யும் வேலையை அப்பாவிடம் கற்றுக்கொள்கிறார்.

-விளம்பரம்-

தன் அப்பாவிடம் தாளக்கருவியை வாங்கும் வாடிக்கையாளராக இருக்கிறார் கர்நாடிக் இசையில் பல விருதுகளை பெற்ற மூத்த இசைக் கலைஞர் வேம்பு ஐயர்(நெடுமுடி வேணு).அவரது உதவியாளராக மணி (வினித்) என்பவரும் இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் எதிர்ச்சியாக இசைக் கலைஞர் வேம்பு ஐயரிடம் (நெடுமுடி வேணு) தாள கருவியை கொடுக்க செல்லும் பீட்டர் வேம்பு ஐயரின் தாளத்தை பார்த்தும் அவருக்கு குவிவும் பாராட்டை பார்த்தும் வியந்து விடுகிறார். இதனால் பீட்டருக்கு மிருதங்க வித்தவனாக வரவேண்டும் என்று ஆசை வந்து விடுகிறது.

பின்னர் வேம்பு ஐயரிடம், தான் மிருதங்கம் கருக்கொள்ள ஆசைப்படுகிறார் பீட்டர். ஆனால் பீட்டர் பிறந்த சமூகத்தின் காரணமாக, அவனது ஆசை நிராகரிக்கப்படுகிறது. மிருதங்கம் மீதான பீட்டரின் காதல் வென்றதா என்பதை ஒரு இசை திருவிழாவாக சொல்கிறது சர்வம் தாளமயம்.

ப்ளஸ் :

முதல் ப்ளஸ் என்றால் அது ஏ ஆர் தான் பின்னணி இசை, பாடல்கள் அனைத்தும் பிரம்மாண்டத்தை நோக்கி செல்லாமல் அத்தனையும் ரசிக்கும் விதமாக இருக்கிறது. மேலும், படத்தின் ஒளிப்பதிவும் ஒரு ப்ளஸ். இதுக்கு முன்னாடி எவன் வாசிச்சான் இவன் வாசிக்க,
பேனா தயாரிக்கிறவன்லாம் கவிஞர் ஆக முடியாது போன்ற வசனங்களில் வசனகர்தாவின் கெட்டிக்காரத்தனம் வெளியாகிறது.மேலும், டிடி உட்பட அணைத்து கலைஞர்களின் தேர்வும் மிக கச்சிதம்.

மைனஸ் :

படத்தில் குறை என்று சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை. அதே போல ஜி வி பிரகாஷ் கம் பேக் எடுக்கும் காட்சி அந்த அளவிற்கு சொல்லும்படி அல்ல. மேலும், சிரிக்க வைக்க கொஞ்சம் கஷ்டபட்டிருக்கிறார். ஒரு சில தேவை இல்லாத காட்சிகள்.முதல் பாதி சர்ரேன்று சென்று விடுகிறது. ஆனால், இரண்டாம் பாதி கொஞ்சம் நீளமாக இழுக்கிறது அதிலும் சங்கீத சாம்ராட் ரியாலிட்டி ஷோ காட்சிகளை மட்டும் இன்னும் கொஞ்சம் கத்திரித்திருக்கலாம்.

படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல சர்வமும் தளமயம் தான் என்பதை அழுத்தமாக சொல்லியுள்ளார் இயக்கனுர். கர்நாடக சங்கீதம் ராஜூவ் மேனனின் முந்திய படைப்பான ‘மின்சாரகனவு ‘ படத்துடன் இப்படம் பல விதத்தில் நீங்கள் சம்மந்தபடுத்த முடியும். குடும்பத்துடன் கண்டிப்பாக ஒரு டிக்கட் போடலாம். மொத்தத்தில் இந்த படத்திற்கு Behindtalkies-ன் மதிப்பு 7/10.

Advertisement