விஜய் 63 படத்தில் நான் நடிக்கவில்லை.! ஷாக் கொடுத்த முக்கிய நடிகர்.! அப்போ அந்த புகைப்படம் பொய்யா.!

0
1057
Vijay-63
- Advertisement -

இளையதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. மேலும், இந்த படத்தில் பிரபல நடிகர் ராஜ் குமாரும் நடிக்கிறார் என்ற ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இவர் விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்ச்சயமானார். மேலும், விஜய் சேதுபதியுடன் ‘விக்ரம் வேதா’ சமீபத்தில் வெளியான ’96’ போன்ற படத்திலும் நடித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் இவரும் விஜய் 63 படத்தில் நடித்து வரும் யோகி பாபவின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் இருவரும் கால் பந்து விளையாட்டில் அணியின் ஜெர்சியில் இருந்தனர். இதனால் இந்த படம் கால் பந்து சம்மந்தபட்ட கதை தான் என்பது உறுதியானது.

ஆனால், உண்மையில் அந்த புகைப்படம் விஜய் 63 படபிடிப்பின் போது எடுக்கபட்டது இல்லையாம். இந்த புகைப்படம் யோகி பாபு மற்றும் ராஜ் குமார் இருவரும் கதிருடன் ‘ஜடா’ என்ற படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் நடிகர் ராஜ் குமார் விளக்கமளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement