சிறையில் இருக்கும் கிஷோர் கே சாமி மீது நடிகர் ரகுவரனின் மனைவி ரோகினி புகார்.

0
887
kishore
- Advertisement -

தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோர் குறித்தும், தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் தொடர்ந்து அவதூறு கருத்துகளைப் பதிவிட்டு வரும் கிஷோர் கே. ஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பெண் பத்திரிகையாளரை தர குறைவாக பேசிய குற்றத்திற்கும் சேர்த்து இவர் மீது வழக்கு தொடரப்பட்டுளது. தன்னை ஒரு பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொள்ளும் கிஷோர் கே சாமி, தீவிர பா ஜ க ஆதரவாளர்.

-விளம்பரம்-

இதனால் இவர் தி மு க கட்சி குறித்தும் அதில் உள்ள தலைவர் மற்றும் மூத்த நபர்கள் குறித்தும் தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் அவதூறாக பேசி வந்தார். இப்படி ஒரு நிலையில் திமுக-வின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஐடி விங் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கடந்த 10-ம் தேதி கிஷோர் கே சாமியை கைது செய்ய வேண்டும் என்று புகார் மனு ஒன்றை அளித்து இருந்தார்.

இதையும் பாருங்க : கேஜிஎப்-ல் சிறுவயது ராக்கயாக நடித்த சிறுவன் – மூனே வருசத்துல எப்படி மாறி இருக்கார் பாருங்க. வைரலாகும் புகைப்படம்

- Advertisement -

அந்த புகாரில், தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோர் குறித்தும், தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் தொடர்ந்து அவதூறு கருத்துகளைப் பதிவிட்டு வரும் கிஷோர் கே. ஸ்வாமிமீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதை தொடர்ந்து கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டு அவர் மீது கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், சமூகத்துக்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டுதல் என மொத்தம் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் மறைந்த நடிகர் ரகுவரனின் மனைவியும் நடிகையுமான ரோகிணியும் கிஷோர் கே சாமி மீது புகார் அளித்துள்ளார்.

-விளம்பரம்-

கடந்த 2014-ஆம் ஆண்டு கிஷோர் கே சாமி, தனது வலைதள பக்கத்தில் மறைந்த நடிகர் ரகுவரன் மற்றும் தன்னை பற்றியும் இழிவுப்படுத்தும் வகையில் கருத்தை பதிவிட்டிருந்தார். இந்த தவறான கருத்துகளால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டாதாகவும், இதே போல் பாஜக மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டிருந்தார். இதனால் கிஷோர் கே சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement