அட பாவமே, கொரோனாவால் முடங்கிய சினிமா – மளிகை கடையை திறந்த தமிழ் இயக்குனர்.

0
1076
babu
- Advertisement -

உலகமே கொரோனாவின் சீற்றத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து விதமான படப்பிடிப்புகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் திரைத்துறையினர் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் சினிமா துறையினர் பலரும் வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள். இந்தி நடிகர் சோலங்கி திவாகர் பழ வியாபாரம் செய்யும் புகைப்படம் சமீபத்தில் தான் வெளியானது.

-விளம்பரம்-

இந்த நிலையில் பிரபல தமிழ் இயக்குனர் ஆனந்த் அவர்க்ள சென்னை முகலிவாக்கத்தில் மளிகை கடை ஒன்றை திறந்துள்ளார். இவர் ஒரு மழை நான்கு சாரல், மவுன மழை, பாரதிபுரம், நானும் ஒரு பேய் தான் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். கொரோனா ஊரடங்குக்கு முன்பு தான் இவர் துணிந்து செய் என்ற படத்தை இயக்கி வந்தார்.இந்நிலையில் கொரோனா காரணமாக வருமானம் இல்லாமல் தவித்து வருவதால் தற்போது இவர் மளிகை கடை ஒன்றை திறந்து உள்ளார்.

- Advertisement -

இது குறித்து ஆனந்த் அவர்கள் கூறியது, கொரோனாவால் 3 மாதங்களாக சினிமா தொழில் எதுவும் இல்லை. இதனால் ஏதாவது ஒரு தொழில் செய்யலாமே என்று முடிவு எடுத்து நண்பர் ஒருவரின் இடத்தை வாடகைக்கு வாங்கி மளிகை கடை திறந்துள்ளேன். இங்கு குறைந்த விலைக்கு தரமான பொருட்களை விற்கிறேன். கடை முன்னால் விலைபட்டியல் போர்டும் வைத்து இருக்கிறேன்.

This image has an empty alt attribute; its file name is 202006231405253133_Tamil_News_Film-director-open-grocery-shop_SECVPF.gif

இந்த கொரோனா கஷ்ட காலத்தில் மக்களுக்கு ஒரு சேவையாக இந்த தொழிலை செய்கிறேன். படப்பிடிப்பு தொடங்கியதும் நான் இயக்கி வரும் துணிந்து செய் படவேலைகளை மீண்டும் துவங்கி விடுவேன். ஆனாலும், இந்த கடையை மூடமாட்டேன். வேறு ஒருவரை வேலைக்கு வைத்து கடையை நடத்துவேன் என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement