தேசிய விருது கிடைத்ததும் இளையராஜாவை நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய பிரபலம்.

0
1109
- Advertisement -

தனக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டதை அடுத்து இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிய தேவி ஸ்ரீ பிரசாத். தமிழ் சினிமாவில் எப்போதும் எனர்ஜியாக இருந்து வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத் என்னும் DSP.  இவர் 1979ஆண்டு ஆந்திரா மாநிலம் அமலாபுரம் என்னும் ஊரில் ஆகஸ்ட் 2 தேதி பிறந்தார். இவர் 1999ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான தேவியின் மூலம் தனது 19வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின் அவர் விஜய் நடித்த பத்ரி திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். அந்த படத்தில் அவர் இசை அமைப்பாளர் மட்டுமின்றி ஏஞ்சல் வந்தாலே மற்றும் கிங் ஆப் சென்னை பாடல்களையும் பாடியுள்ளார். அதன் பின்னர் இவரின் இசையில் வெளிவந்த மழை, சச்சின், இனிது இனிது காதல் இனிது, ஐஸ், சிங்கம், கந்தசாமி, குட்டி, மன்மதன் அம்பு, திருப்பாச்சி, மாயாவி, ஆறு, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், வில்லு, வேங்கை, அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, வீரம், பிரம்மன், புலி, சாமி 2 உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

- Advertisement -

தற்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்திற்கு இசையமைத்து வருகிறார்.  இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் தனது திறமையை காட்டி வருகிறார். சமிபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படமும் தாயாகி வருகிறது.

தெலுங்கில் தேவி ஸ்ரீ பிரசாத் கொடி கட்டி பறக்கிறார். அவர் இசையமைக்கும் அத்தனை பாடல்களும் துள்ளல் இசையுடன் கேட்டவுடன் ரசிகர்களுக்கு பிடித்து விடும் வண்ணம் உள்ளது. இப்படியான நிலையில் அவர் நிறைய பாடல்களையும் தமிழில் பாடியுள்ளார்.    

-விளம்பரம்-

தேசிய விருது

கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற 69 ஆவது தேசிய விருதுகள் பல்வேறு திரைப்படங்களுக்கு அறிவிக்க பட்டு வந்தது. இதில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை மணிகண்டனின் ‘கடைசி விவசாயி’ படத்திற்கும் . சிறந்த படத்துக்கான விருதை மாதவனின் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ வென்றுள்ளது. மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ‘புஷ்பா’ படத்துக்காக தேவிஸ்ரீ பிரசாத்துக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சமுக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

தனக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அளிக்க பட்டதை அடுத்து சென்னை கோடம்பாக்கதில் உள்ள இளையராஜாவின் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்குச் சென்ற அவர், இளையாராஜாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். அதன் பின் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”தேசிய விருது பெறுவதற்கு வழிவகுத்த அனைத்து ஊக்கங்களும் தந்த இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டு இருந்தார்.

Advertisement