பிக் பாஸ் சீசன் 7ல் அதிரடி மாற்றம்-வெளியான புது ப்ரோமோ- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0
784
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 குறித்த புதிய ப்ரோமா தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்சிகளில் மிகவும் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இது ஆரம்பம் முதல் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் ஆரம்பம் சீசன் 7 வரை வந்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மற்றொரு பலம் என்றால் உலக நாயகன் கமல்ஹாசன் தான். இவர் தான் இந்த நிகழ்ச்சிற்கு தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெறுகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் புதுப்புது வித்தியாசமான டாஸ்க்களை கொடுத்து மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் பட்டத்தை வெல்லும் வெற்றியாளர்களுக்கு பரிசு தொகையாக 50 லட்சமும் கொடுக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி:

மேலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி இருந்தது. இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் தான் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் அசிம் டைட்டில் வின்னரானார். விக்ரமன் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி:

அதோடு இந்த முறை நிகழ்ச்சியில் யார்? கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவல் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு காமெடி நடிகர் சரத், பாவனா, மாகாபா, உமாரியாஸ் ஆகியோர் ஆடிஷனில் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் விஜய் டிவி சார்பாக யார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பார்கள் என்று தெரியவில்லை.

-விளம்பரம்-

போட்டியாளர்கள் குறித்த தகவல்:

இவர்களை அடுத்து நடிகை ரேகா நாயர், தினேஷ், ராபர்ட் மாஸ்டர், ஜாக்குலின், பெண் ட்ரைவர் ஷர்மிளா போன்ற பல பிரபலங்களின் பெயர்கள் அடி படுகிறது. சோஷியல் மீடியாவில் வைரலானவர்கள், ஒருகாலத்தில் பரபரப்பாக இருந்து இன்று ஒதுங்கியிருக்கும் சீனியர் நடிகைகள், மாடல்கள், வெளிநாடுவாழ் தமிழர்கள் என்று கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது.

புதிய ப்ரோமோ:

அதாவது, பிக் பாஸ் சீசன் 7 குறித்த புதிய புரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் வழக்கம் போல் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்து பிரம்மாண்டமாக சொல்லிக் கொண்டு வருகிறார். அதற்கு எதிராக கிண்டல் செய்வது போல் இன்னொரு கமலும் பேசுகிறார். இறுதியில் இந்த முறை இந்த நிகழ்ச்சியில் ஒரு வீடு இல்லை இரண்டு வீடு என்று கூறுகிறார்கள். ஆக மொத்தம் இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருப்பது உறுதியாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இதனால் போட்டியாளர்கள் அதிகமாகவார்களா? எப்படி இரண்டு பிக் பாஸ் வீட்டை காண்பிக்க போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிங்கர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது.

Advertisement