விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் பிரபலம் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்

0
1427
kamal

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் இன்று (ஜூன் 17 ) ஒளிபரப்பாக உள்ளது. நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களும் மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு பிக் பாஸ் வீட்டினுள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

AnanthVaidyanathan

உலகநாயகன் கமல் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் 2 போட்டியில் பங்குபெறும் 16 போட்டியாளர்களை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து பிக் பாஸ் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார்.

AnanthVaidyanathan

பல சினிமா பிரபலங்கள் பங்குபெற்றுள்ள இந்த சீசனில் விஜய் டிவியின் பிரபல ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் குரல் பயிற்சியாளராக இருந்து வரும் ஆனந்த் வைத்யநாதனும் பங்குபெற்றுள்ளார். சூப்பர் சிங்கரில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு குரல் வள பயிற்சிகளை அளித்து வரும் இவர், இயக்குனர் பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்திலும் நடித்திருந்தார்.

Aanandvaithyanadhan

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் விஜய் டிவி அணைத்து விதமான போட்டியாளர்களையும் களமிறங்கியுள்ளது. இக்கால இளைஞர்களிடம் சமீபத்தில் பிரபலமடைந்த யாசிக்க ஆனந்த் தொடங்கி, பழம்பெரும் வில்லன் நடிகர் பொன்னம்பலம் வரை இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளது. இதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்களை கவரவே அனந்த் வைத்யநாதனை களமிறக்கிளியுள்ளது பிக் பாஸ் .